Bank Holidays July 2022: ஜூலை மாதம் 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

Bank Holidays July 2022: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 04:00 PM IST
  • ஜூலை 2022 வங்கி விடுமுறைகள்.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Bank Holidays July 2022: ஜூலை மாதம் 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் title=

ஜூலை 2022 வங்கி விடுமுறைகள்: ஜூலை மாதம் நாளை முதல் தொடங்குகிறது. ஜூலை மாதத்தில் வங்கியில் உங்களுக்கு பணிகள் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 

ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கி விடுமுறைப் பட்டியலை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்ட், ரியல் டைம் க்ராஸ் செட்டிள்மெண்ட் ஹாலிடே மற்றும் பாங்க்ஸ் க்ளோசிங் ஆஃப் அகௌண்ட்ஸ் ஆகியவை அடங்கும். 

தேசிய விடுமுறைகள் தவிர, பிரத்யேகமான சில மாநில விடுமுறைகளும் உள்ளன. இதில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை இங்கு காணலாம். 

மேலும் படிக்க |IBPS Clerk 2022 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, நாளை முதல் பதிவு துவக்கம் 

விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ

ஜூலை 1 2022: காங் (ரத்ஜத்ரா) / ரத யாத்திரை - புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 3 2022: ஞாயிறு (வார விடுமுறை)
5 ஜூலை 2022: செவ்வாய் - குரு ஹர்கோவிந்தின் ஒளி நாள் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
6 ஜூலை 2022: புதன் - MHIP நாள் - மிசோராம்
ஜூலை 7: கர்ச்சி பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 9: சனிக்கிழமை (மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை), ஈத்-உல்-அதா (பக்ரீத்)
ஜூலை 10: ஞாயிறு (வார விடுமுறை)
ஜூலை 11: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் Ez-ul-Aza- வங்கிகள் மூடப்பட்டன
ஜூலை 13: பானு ஜெயந்தி - காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 14: பென் டியன்க்லாம் - ஷில்லாங்கில் வங்கிகள்மூடப்பட்டிருக்கும்
ஜூலை 16: ஹரேலா-டேராடூனில் வங்கி மூடப்பட்டது
ஜூலை 17: ஞாயிறு (வார விடுமுறை)
ஜூலை 23: சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
ஜூலை 24: ஞாயிறு (வார விடுமுறை)
ஜூலை 26: கேர் பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூலை 31: ஞாயிறு (வார விடுமுறை)

மேலும் படிக்க | Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News