IRCTC: ரயிலில் டிக்கெட் புக் பண்ணவே முடியவில்லையா... இதோ இன்னொரு ஈஸி வழி இருக்கு!

Train Ticket Booking: தற்போது IRCTC இணையதளம் முடங்கியுள்ளதால் அமேசான், பேடிஎம் போன்ற வேறு தளங்களில் எப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 25, 2023, 02:51 PM IST
  • IRCTC இணையதளம் தற்போது முடங்கியுள்ளது.
  • இதனால், ஏராளமான பயணிகள் டிக்கெட் பதிவு செய்ய இயலாமல் திணறுகின்றனர்.
  • தற்போது B2C தளங்கள் மூலம் முன்பதிவு நடைபெறுகிறது.
IRCTC: ரயிலில் டிக்கெட் புக் பண்ணவே முடியவில்லையா... இதோ இன்னொரு ஈஸி வழி இருக்கு! title=

Train Ticket Booking: தொழில்நுட்ப காரணங்களால் IRCTC இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இந்திய ரயில்வே பயணிகள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இணையதளத்தைத் திறக்கும் போது அதை பயன்படுத்த இயலாது என வகையில் திரையில் செய்தியைக் காண்பிக்கும். 

இதுகுறித்து, IRCTC அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் மூலம் விளக்கத்தை அளித்துள்ளது.   IRCTC அதன் ட்விட்டர் பக்கத்தில், "தொழில்நுட்ப காரணங்களால் டிக்கெட் வழங்கும் சேவை கிடைக்கவில்லை. எங்கள் தொழில்நுட்பக் குழு சிக்கலைத் தீர்த்து வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதும் நாங்கள் அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளது. 

இருப்பினும், நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், IRCTC-இன் படி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேறு வழிகள் உள்ளன, அதனை ரயில்வே துறையும் அறிவுறுத்தியுள்ளது. அமேசான், பேடிஎம் போன்ற பிற தளங்களைப் பயன்படுத்தி பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க CSIR தொழில்நுட்ப குழு செயல்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவு.. டிக்கெட் எடுக்க முடியவேயில்லை - திணறும் IRCTC

இந்த Amazon போன்ற B2C இயங்குதளங்களைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், முன்பதிவு செயல்முறையை முடிக்க, பயனர்களுக்கு அவர்களின் IRCTC பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமேசான் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

- Amazon செயலிக்கு செல்லவும்.

- இப்போது, "Amazon Pay" ஆப்ஷனை திறக்கவும்.

- இதற்குப் பிறகு, "புக் டிக்கெட்டுகள்", பின்னர் "ரயில்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் சேரும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.

- பயண தேதிகள் போன்ற பிற விவரங்களை உள்ளிடவும்.

- நீங்கள் பயணம் செய்யும் விரும்பும் ரயில் வகுப்பைத் தேர்ந்தெடுத்து, செயலியில் அது தொடர்புடைய பெட்டியை டிக் செய்யவும்.

- பயனர்கள் அவர்களுக்கு தகுந்த நேரம் உள்ளிட்ட பல்வற்றை வைத்து Filter ஆப்ஷன்கள் இருக்கும்.

- அது முடிந்ததும், செயலியில் நீங்கள் உள்ளீடு செய்த விவரங்களுடன் கிடைக்கக்கூடிய ரயில்களைக் காண்பிக்கும்.

- பயனர்கள் தாங்கள் விரும்பும் ரயிலைத் தேர்ந்தெடுக்கலாம்.

படி 10- பொருந்தினால், "பொது", "மூத்த குடிமகன்" அல்லது "பெண்கள்" போன்ற குறிப்பிட்ட வகைகளைத் தேர்வு செய்யவும்.

படி 11- அனைத்து விவரங்களும் முடிந்ததும், செயல்முறையை முடிக்க "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

விருப்பமான முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செயல்முறையை முடிக்கலாம். பரிவர்த்தனை முடிந்ததும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விவரங்கள் உங்கள் கணக்கில் பகிரப்படும்.

மேலும் படிக்க | பயணிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. இனி இந்த வசதியெல்லாம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News