PF வட்டியிலும் கை வைக்கும் மத்திய அரசு! ஊழியர்களுக்கு மற்றுமொரு கெட்ட செய்தி

2021-22 நிதியாண்டுக்கான வட்டியை வெளியிடத் தொடங்கியுள்ளதாகவும், ஊழியர்கள் எந்த வித இழப்பையும் சந்திக்க மாட்டார்கள் என்றும் ஈபிஎஃப்ஓ ​​தெரிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 4, 2022, 11:06 AM IST
  • வருங்கால வைப்பு நிதி வட்டி.
  • பிஎஃப் இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்.
  • EPFO செய்திகள்.
PF வட்டியிலும் கை வைக்கும் மத்திய அரசு! ஊழியர்களுக்கு மற்றுமொரு கெட்ட செய்தி title=

ஈபிஎஃப்ஓ செய்திகள்: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பெரும் கவலையைத் தீர்த்துள்ளது. 2021-22 நிதியாண்டுக்கான வட்டியை வெளியிடத் தொடங்கியுள்ளதாகவும், ஊழியர்கள் எந்த வித இழப்பையும் சந்திக்க மாட்டார்கள் என்றும் ஈபிஎஃப்ஓ ​​தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு, 2021-22 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. பொதுவாக, ஈபிஎஃப்ஓ, அரசாங்கத்தால் வட்டி விகிதத்தை நிர்ணயித்த பிறகு, வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் வட்டியைச் சேர்க்கத் தொடங்குகிறது. கடந்த நிதியாண்டிற்கான வட்டி டெபாசிட் அறிக்கைகளில் காட்டப்படவில்லை, அதன் பிறகு 5 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

இது தொடர்பாக இப்போது ஈபிஎஃப்ஓ ​​ட்வீட் மூலம் ஒரு தகவலைத் தந்துள்ளது, அதன் படி, "வட்டியை விடுவிக்கும் செயல்முறை தற்போது நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் அது உங்கள் கணக்கில் பிரதிபலிக்கும். எப்போது வட்டி வரவு வைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அது முழுமையாக செலுத்தப்படும், வட்டி இழப்பு ஏற்படாது" என்றார்.

பிஎஃப் இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்
* கட்டணமில்லா எண்ணில் மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பு அறிக: 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் உங்களது பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும். பிஎஃப் இருப்பு அறிய இந்த எண்ணுக்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து நீங்கள் அழைத்து தகவல் பெறலாம்.

* செயலி மூலம் பிஎஃப் இருப்பு சரிபார்த்தல்: இரண்டு மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் நீங்கள் உங்களுடைய பிஎஃப் இருப்புத் தொகையை அறிந்துகொள்ள முடியும்.

* ஈபிஎஃப்ஓ-ன் m-Sewa செயலி: உங்களுடைய மொபைலில் m-Sewa செயலியை தரவிறக்கம் செய்து, அதில் ‘மெம்பர்’ என்பதற்குள் சென்று ‘பேலன்ஸ்/பாஸ்புக்’ என்பதை அழுத்தி உங்களின் EPF இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

* உமங் செயலி: உங்களுடைய மொபைலில் உமங் செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் Employee Centric Services என்பதற்கு கீழ் இருக்கும் ஈபிஎஃப்ஓ ஆப்ஷனுக்குச் சென்று உங்களுடையை ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News