ஊழியர்களுக்கு மாஸ் புத்தாண்டு பரிசு: 4-5% டிஏ ஹைக், மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது!!

7th Pay Commission: கடந்த சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வரும் மாதங்களிலும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 19, 2023, 04:26 PM IST
  • 7th Pay Commission: சமீபத்திய அப்டேட் என்ன?
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
  • AICPI குறியீட்டு புள்ளிவிவரங்கள் எப்படி உள்ளன?
ஊழியர்களுக்கு மாஸ் புத்தாண்டு பரிசு: 4-5% டிஏ ஹைக், மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது!! title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: கடந்த சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வரும் மாதங்களிலும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. இவை அவர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த முறை அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில், அகவிலைப்படியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 4 அல்லது 5 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. இது நடந்தால், அந்த உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது தவிர மற்றொரு நல்ல செய்தியும் அவர்களுக்கு வரக்கூடும். இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

7th Pay Commission: சமீபத்திய அப்டேட் என்ன?

அகவிலைப்படி உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு ஆகியவை அடிப்படைச் சம்பளத்தில் நல்ல உயர்வுக்கு வழிவகுக்கும். இது தவிர, நிலுவையில் உள்ள டிஏ பாக்கி பணத்தையும் அரசு கணக்கில் டெபாசிட் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் என நம்பப்படுகிறது. இது குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 

மோடி அரசு விரைவில் டிஏ -வை (DA) 4 சதவீதம் அல்லது 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாகவும், அது 5 சதவிகிதம் அதிகரித்தால் 51 சதவிகிதமாகவும் உயரும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏற்றமாக இருக்கும். எனினும் இதன் முடிவு டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வந்தவுடன் நிர்ணயிக்கப்படும்.

தற்போது ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்கள் 46 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். சில நாட்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரியில் அல்லது மார்ச் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கு முன், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை (DA Hike) அறிவிக்கலாம், இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த அதிகரிப்பு அமலுக்கு வருகிறது. 

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் பணம் பத்திரமா இருக்கும்: டாப் 3 வங்கிகளின் பெயர்களை வெளியிட்ட RBI

AICPI குறியீட்டு புள்ளிவிவரங்கள் எப்படி உள்ளன? 

ஏஐசிபிஐ குறியீட்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைபப்டியில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபப்டி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (DA), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

18 மாத டிஏ அரியர் தொகை விரைவில் வரக்கூடும்

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கியுள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் அளிப்பது சாத்தியம் என நம்பப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையில் முடக்கப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தொகையை (DA Arrears) அரசாங்கம் இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. டிஏ அரியர் தொகை பற்றி அரசாங்கம் எதையும் இன்னும் கூறவில்லை. எனினும் தேர்தலுக்கு முன் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | SIP... உங்களை கோடீஸ்வரனாக்கும் ஃபார்முலா... இன்றே முதலீட்டை தொடங்கவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News