7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது

7th Pay Commission: ஊழியர்களுக்கான டிரேவலிங் கிரேட் உயர்த்தப்பட்டுள்ளது. ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் தவிர தேஜஸ் ரயில்களில் பயணிக்க மத்திய ஊழியர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2022, 10:55 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பிரகாசமாகிவிட்டது.
  • சில நாட்களுக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வந்தது.
  • அகவிலைப்படி உயர்வு காரணமாக, ஊழியர்களின் டிஏ உயர்வு ஏற்பட்டது.
7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது title=

7வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பிரகாசமாகிவிட்டது. இந்த தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பரிசுகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். சில நாட்களுக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து, தற்போது பயணப்படியும் (TA) அதிகரித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக, ஊழியர்களின் டிஏ உயர்வு ஏற்பட்டது. 

எனினும், தற்போது டிரேவலிங் கிரேட் உயர்த்தப்பட்டுள்ளது. ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் தவிர தேஜஸ் ரயில்களில் பயணிக்க மத்திய ஊழியர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். 

சமீபத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் அகவிலைப்படி அதிகரிப்பின் விளைவு பயணப்படியிலும் (டிஏ) தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணப்படியில் நன்மை கிடைக்கும்

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தில் தேஜஸ் ரயிலில் பயணிக்க முடியும். அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பயணத் திட்டங்களுக்கு இந்த ரயிலைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐஆர்சிடிசி-இன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் நாட்டின் முதல் தனியார் மற்றும் பிரீமியம் வகுப்பு ரயிலாகும். மேலும் நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்கள் இப்போது அதில் பயணிக்க முடியும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: தீபாவளி போனஸ், டிஏ ஹைக், ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் 

டிஏ (பயணப்படி) கணக்கீட்டைப் பார்க்கவும்

பயணக் கொடுப்பனவு பே மேட்ரிக்ஸ் நிலையின் அடிப்படையில் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

- முதல் வகை: அதிக போக்குவரத்து கொடுப்பனவு (ஹையர் டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ்) நகரத்திற்கானது. 

- இதன் பயணப்படி கணக்கீட்டிற்கான சூத்திரம் இதோ
Total Transport Allowance = TA + [(TA x DA% )\/100]

எந்தெந்த பிரிவில் எவ்வளவு டிஏ கிடைக்கிறது தெரியுமா?

இப்போது பயணப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்க்கலாம். இதன் கீழ், TPTA க்கு 1-2 க்கு ரூ 1350, 3-8 நிலை ஊழியர்களுக்கு ரூ 3600 மற்றும் 9-க்கு மேல் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு ரூ 7200 வழங்கப்படுகிறது.

இதன் கீழ், நிலை 9 மற்றும் அதற்கு மேல் உள்ள ஊழியர்கள், அதிக போக்குவரத்துக் கொடுப்பனவு உள்ள நகரங்களுக்கு 7,200 ரூபாய் TA + DA பெறுகின்றனர். மற்ற நகரங்களுக்கு இந்த கொடுப்பனவு ரூ 3,600 + டிஏ ஆகும். 3-8 நிலை வரை உள்ள பணியாளர்களுக்கு 3,600 பிளஸ் டிஏ மற்றும் 1,800 பிளஸ் டிஏ கிடைக்கும். லெவல் 1 மற்றும் 2ல் இந்த பிரிவில் முதல் வகுப்பு நகரங்களுக்கு ரூ.1,350 + டிஏ, மற்ற நகரங்களுக்கு ரூ. 900 + டிஏ கிடைக்கும்.

இந்த ஊழியர்களுக்கு அதிக பயணப்படி கிடைக்கும்

கார் வசதி பெற்ற, அமைச்சரவை செயலர் அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, மாதம், 15,750 ரூபாய் + டி.ஏ கிடைக்கும். சம்பள நிலை 14 மற்றும் அதற்கு மேலான பே கிரேட் உள்ள ஊழியர்களுக்கு கார் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News