7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீப காலங்களாக பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து உழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவுகிதமாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஊழியர்களின் அகவிலைப்படி மொத்தம் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அடுத்ததாக புதிய ஆண்டில் ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும். இதனுடன் பயணப்படி (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவையும் அதிகரிக்கலாம். இது தவிர, ஃபிட்மென்ட் ஃபாக்டரிலும் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கக்கூடும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது
7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் அடிப்படையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டது. இதன் அடிபப்டையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,000 -இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ளது. இருப்பினும், பரிந்துரைகளின்படி இதை 3 மடங்காக வைத்திருக்குமாறு கோரப்பட்டது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 சதவிகிதமாக இருந்தால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 ஆக இருந்திருக்கும். மத்திய ஊழியர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 சதவிகிதமாக வைத்திருக்க கோரினர். ஆனால் அன்றிலிருந்து இந்த விவகாரம் அப்படியே முடிவு எதுவும் எடுக்கப்படாமல் சிக்கியுள்ளது. பல வருடங்களாகியும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாறாமல் உள்ளது. எனினும், தற்போது இது தொடர்பான நல்ல செய்தி வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் (Fitment Factor) மாற்றம் வரக்கூடும் என்று கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்க, அரசு இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தற்போதுள்ள 2.57 மடங்கிலிருந்து 3 மடங்காக உயரக்கூடும்.
பிற கொடுப்பனவுகளில் ஏற்றம்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி (DA), பயணப்படி (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), மருத்துவ செலவுகள் (Medical Reimbursement) போன்ற அலவன்ஸ்கள் அடங்கும். அகவிலைபப்டி அதிகரித்த பிறகு, பயணப்படியும் அதிகரிக்கப்படுகிறது. அகவிலைப்படி ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது எச்ஆர்ஏ -விலும் அதிகரிப்பு ஏற்படுகின்றது. அனைத்து அலவன்சுகளையும் கணக்கில் கொண்டு ஒரு மத்திய ஊழியரின் மாதாந்திர CTC கணக்கிடப்படுகிறது.
44% ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாக உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து ரூ.26,000 ஆக உயரும்.
இதன் மூலம், ஊழியர்களுக்கு அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அரசு அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்தால் அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ