7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 4 சதவிகிதம் அதியகரித்தது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இன்னும் பல பரிசுகளை ஊழியர்கள் எதிர்பார்க்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் முக்கியமானவை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு மற்றும் டிஏ அரியர் தொகையாக இருக்கும். இதை பற்றி விரிவாக காணலாம்.
சில நாட்களுக்கு முன், அரசு ஊழியர்களின் அகவிலைபப்டியை (Dearness Allowance) உயர்த்தி பெரிய நிவாரணம் அளித்தது. இதனால் ஏராளமான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. இப்போது ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றொரு முயற்சியாக ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்பு பற்றியும் டிஏ அரியர் தொகையை அளிப்பது பற்றியும் அரசு யோசிக்கலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு
மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் பாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. அதையும் தற்போது அரசு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை ஊதியத்துடன் தொடர்பு கொண்டுள்ளதால், இதில் ஏற்படும் ஏற்றம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிகரிப்பை கொண்டு வரும். அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.60 மடங்கிலிருந்து 3.0 மடங்காக அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு அடிப்படை சம்பளத்தில் ஒரு பம்பர் அதிகரிப்பு சாத்தியமாகும் என கருதப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாக உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த கோரிக்கை உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து ரூ.26,000 ஆக உயரும்.
இதன் மூலம், ஊழியர்களுக்கு (Central Government Employees) அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அரசு அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை பற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்தால் அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக இருக்கும்.
18 மாத டி அரியர் தொகை
கொரோனா காலத்தில், அப்போது உருவான அசாதாரண சூழ்நிலை காரணமாக மத்திய அரசு அகவிலைப்படியை முடக்கியது. நிலைமை சற்று சரியானவுடன் டிஏ முடக்கம் நீக்கப்பட்டது. எனினும், மோடி அரசாங்கம் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை முடக்கப்பட்ட டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை. இந்த டிஏ அரியர் (Da Arrears) தொகையை அளிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது.
புதிய திட்டம் வருகிறதா?
சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே (7th Pay Commission) இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. ஆனால், என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை.
மேலும் படிக்க | அமேசான் அல்காரிதம் மூலம் முறைகேடாக 1 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ