மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றுவருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 4600 காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 11 தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் நடத்தியதில் ஜல்லிகட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.
அதை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் தினமான ஜன.,15-ம் தேதி பால மேட்டில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது முடிந்தது.
இந்த ஜல்லிக்கட்டில் போட்டியில் 1000 காளைகள், 1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டத்தை அடுத்து, இந்த ஆண்டு பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று நடக்கும் ஜல்லிக்கட்டை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவைகள் கால்நடை மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். இதில் வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.