Reliance Jio-ன் கால நீட்டிப்பு திட்டத்தினை அடுத்து BSNL, ரூ.118-க்கு அதிரடி சலுகை திட்டத்தினை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது!
Jio, Vodafone மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டிப் போடும் வகையில் BSNL ரூ.118-க்கு அதிரடி Unlimited சேவையினை வழங்க திட்டமிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சலுகை தமிழ்நாட்டில் மட்டுமை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையிளர்களுக்கு 3G/ 4G தரவுகள், தேசிய ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளும் கிடைக்கும். கூடுதலாக, இந்த பேக் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர் தனிப்பட்ட ரிங்கிங் பேக் தொனியில் (PRBT) இலவச அணுகலையும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், கொல்கத்தா, மேற்கு வங்கம், அன்டமான் & நிக்கோபார், அசாம் மற்றும் வடகிழக்கு I மற்றும் II மண்டலங்கள் - என 5,000 க்கும் அதிகமான WiFi ஹாட்ஸ்பாட்களை நிறுவும் திட்டத்தினையும் அறிமுகம் செய்ய ஒப்பந்ததாரர்களை அனுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
BSNL நிறுவனமானது கடந்த இரு ஆண்டுகளில், சுமார் 10,000 WiFi ஹாட்ஸ்பாட்டுகளை நாடுமுழுவதும் அமைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டிற்குள் 25000 கிராமப்புற பகுதிகள் உள்பட 100000 இடங்களில் தங்களது ஹாட்ஸ்பாட் சேவையினை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.
Reliance Jio தங்களது வாடிக்கையாளர்களுக்கு நன்மை செய்கின்றதோ இல்லையோ, மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு தன்மை செய்கிறது என்பதில் சந்தேகம் இல்லை!