கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் புதிய காங்கிரஸ்-மஜத அமைச்சர்கள் 34 பேர் பெங்களூருவில் தற்போது பதவியேற்றுள்ளார்!
கர்நாடக முதல்வராக மே 23ம் தேதி பதவியேற்றார் மஜத தலைவரான குமாரசாமி. துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வர் பதவியேற்றார். இதனையடுத்து, கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, இரு கட்சிகள் நடுவே அமைச்சரவை அமைப்பதில் பெரும் சலசலப்பு நிலவியது. பின்னர், இரு கட்சிகள் நடுவே பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்துள்ள நிலையில்.புதிய அமைச்சர்களுக்காக பதவியேற்பு விழா பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் 34 காங்கிரஸ் மற்றும் மஜத அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார்!
தற்போதைய தகவலின்படி, டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். டி.கே.சிவக்குமார் நீர் வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி. தேவெ கெளடாவும் அமைச்சர்களாகி உள்ளார்.
Bengaluru: Congress' DK Shivakumar takes oath as minister in the #Karnataka Cabinet pic.twitter.com/fxGsZRJvmD
— ANI (@ANI) June 6, 2018