புதிய களத்தில் இறங்கிய நடிகர் ஆர்யாவின் “மச்சினிச்சி”

புதிய அவதாரம் எடுத்த கலாபக் காதலன் பட நடிகை “அக்‌ஷயா”

Last Updated : May 7, 2018, 01:08 PM IST
புதிய களத்தில் இறங்கிய நடிகர் ஆர்யாவின் “மச்சினிச்சி” title=

நடிகர் ஆரியா நடிப்பில் உருவான திரைப்படம் கலாபக் காதலன். இப்படம் 2006-ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தின் நாயகி ரேணுகா, நாயகி ஆரியா. இப்படம் சகோதரியின் கணவனை விரும்பும் பெண்ணைப் பற்றியது. இப்படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்த்ள்ள அக்‌ஷயா ரோ படம் முழுக்க கோவத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பின் மூலம் ரசிகர்கள் இருந்தார்களோ இல்லையோ பேரை கேட்டாலே கோபத்திற்கு ஆளானார்கள் சிலர்.  

இப்படத்தை தொடர்ந்து இவர் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’, டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகையாக வளம் வந்த இவர் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். நடிகை அக்ஷயா தற்போது ‘யாளி’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அக்‌ஷயாவே நடித்திருக்கிறார். இப்படத்தில் ஊர்வசி, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் அர்ஜுன் என்ற புதுமுக நடிகரை அறிமுகம் செய்துள்ளனர். 

இப்படத்தைப்பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்‌ஷயா ரோ கூறுகையில்...! 

“பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் நானும் இணைந்துள்ளேன் என்று நினைக்கிறேன். இப்படத்தை ஒரு ரொமான்டிக்-திரில்லர் படமாக எடுத்து இருக்கிறோம். இப்படத்தின் களம் மும்பையை அடிப்படியாக கொண்டது. 

படப்பிடிப்புகள் மும்பை, மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News