இன்றைய (30-03-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க!

பங்குனி உத்தரமான இன்றைய நாள் எப்படி இருக்கும்: உங்கள் அதிஷ்ட நிறம் மற்றும் அதிஷ்ட எண் - உள்ளே!!

Last Updated : Mar 30, 2018, 05:51 AM IST
இன்றைய (30-03-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க! title=
மேஷம்:
இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். பரம்பரைச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பெண் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பழகுங்கள். அவர்களால் சில பிரச்சனைகள் எழலாம். உறவினர்களிடம் மென்போக்கை கடைபிடிக்கவும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 
ரிஷபம்:
இன்று வீண் விரோதம் வேண்டாம். உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுங்கள். அவர்களிடம் பாசம் அதிகரிக்கும். நெருப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. மருத்துவரின் தெளிவான ஆலோசனைக்குப் பின்னரே எந்த மருந்தையும் உட்கொள்வது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 
மிதுனம்:
இன்று சரியான நேரத்தில் உணவு உண்பது நன்மையைத் தரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அடுத்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
 
கடகம்:
இன்று கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும். டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
 
சிம்மம்:
இன்று வெளியூர் செல்லும்போது அலைச்சலும் அதன்மூலம் வேலைப்பளுவும் மனதில் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்சனைகள் சந்திக்க வேண்டி வரலாம். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்கும் போது தகுந்த ஆலோசனைகளின் பேரில் ஆரம்பிக்கவும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 
கன்னி:
இன்று பண கஷ்டம் இருக்காது. ஆனால் தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மிக அருமையான முன்னேற்றம் ஏற்படும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 
துலாம்:
இன்று கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசகரிடம் விவாதித்து செய்யவும். மனைவி பெயரில் தொழில் தொடங்கினால் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்பதில் பணம் பண்ணுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கைக்கு உரிய ஆட்கள் வேலைக்கு கிடைப்பார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
 
விருச்சிகம்;
இன்று வாகனங்களை முறையாக பராமரித்தல் அவசியம். அதன் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் மீதான மதிப்பு மரியாதைக்குண்டான பங்கம் விளைவிக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம். செய்தொழிலில் மந்தம் இருந்தாலும் நல்ல அனுபவமாகவே அது அமையும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
 
தனுசு:
இன்று மிகுந்த நன்மைகள் நடக்கும். பதவி உயர்வில் சிறிது கால தாமதம் ஏற்படலாம். தன் கையே தனக்குதவி” என்ற மந்திரசொல்லுக்கேற்ப உங்கள் மேல் முழு நம்பிக்கை 
 
கொண்டு உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள். எவ்வளவுதான் கஷ்டம் 
 
வந்தாலும் நீங்கள் வேலையை விடுவது நன்மையில்லை. 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 
மகரம்:
இன்று உப தொழில் செய்யும் விருப்பமுடையவர்கள் வேலை பார்த்து கொண்டே செய்வது நல்லது. கஷ்டம் என்பது கானல் நீர் போன்று காணாமல் போகும். வேலை இல்லாதவர்களுக்கு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
 
கும்பம்:
இன்று உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும். திருமண வயது வந்தும்  திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
 
மீனம்:
இன்று வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் அதனால் உயர்பதவி கிடைக்கும். ஆடம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4,6

Trending News