இன்றைய (27-03-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க!

இன்றைய நாள் எப்படி இருக்கும்: உங்கள் அதிஷ்ட நிறம் மற்றும் அதிஷ்ட எண் - உள்ளே!!

Last Updated : Mar 27, 2018, 08:49 AM IST
இன்றைய (27-03-2018) உங்கள் ராசிபலன் - பார்க்க! title=

மேஷம்:
இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உங்களை வந்து சேரும். பணவிஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் பணத்தட்டுப்பாடும், பிறரால் மனக்கஷ்டமும் வரலாம். தொலைத்த பொருட்கள் உங்களிடம் மீண்டும் கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம்:
இன்று உங்களின் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டியதிருக்கும். அனாவசிய செலவினைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைபாக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பு கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

மிதுனம்:
இன்று உங்கள் குடும்பத்தின் நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் கேட்ட இடத்திற்கு மாற்றல் கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் கண்ட கனவு பலிக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்:
இன்று ஆடம்பரப் பொருட்கள் மற்றும் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களைச் சேர்ப்பீர்கள். குலதெய்வத்திற்கு வேண்டியபடி காணிக்கைகளை செலுத்தி விடவும். இறைவனுக்குச் செய்வதில் கணக்குகள் பார்க்காமல் செய்துவிடுவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்:
இன்று மாணவர்கள், அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப கல்வி பயிவோர் சிறப்பான முன்னேற்றம் அடைவர். கல்வியில் மேன்மை உண்டாகும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பினை பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். சாதனைகளைப் படைப்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி:
இன்று கலைஞர்களுக்கு, சண்டை மற்றும் நடிப்பை சொல்லிக் கொடுப்பவர்கள் நல்ல நிலைமைக்கு வருவீர்கள். பிற மொழிகளில் படங்களைத் தயாரித்தல் மேன்மை காணலாம். வெளிவேலைகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் செயல்படுங்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:
இன்று பணவரவு காண்பீர்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதம் ஆகும். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும். உங்கள் பொதுப்பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் மற்றும் தோல்விகள் இருக்காது. சிலர் கௌரவப் பதவி கிடைக்கப் பெறுவர். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்:
இன்று எந்த காரியம் செய்வதானாலும் மிகவும் எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் செயல்படுங்கள். உடல்நலத்தைப் பொறுத்தவரை வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். சரியான வேளைகளில் உணவு எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் அவ்வப்போது மயக்கம் வரலாம். உடலில் ஒருவித சோர்வு உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

தனுசு:
இன்று மனதில் உள்ளதை பிறரிடம் கொட்டி விடுங்கள். அதன்மூலம் உங்களின் மனச்சுமை குறையும். அடுத்தவரின் மனதை எளிதில் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் பிறரின் நிறைகளை எந்த அளவிற்கு காண்பீர்களோ அதே போன்று குறைகளையும் கண்டு கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்:
இன்று குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். சிலர் வீடு மாற்ற வேண்டி வரும். திருமணம் நல்ல முறையில் கைகூடும். உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கும்பம்:
இன்று குடும்பத்துடன் இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:
இன்று ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 

Trending News