தினமும் வால்நட்ஸ் சாப்பிடுங்க.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி!

தினமும் காலை எழுந்த உடன் வால்நட் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. 

வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் நல்லது. மற்ற நட்ஸ் வகை பருப்புகளை காட்டிலும் இதில் உள்ள சத்துக்கள் அதிகம். இது இதயம், முடி, மூளை உள்ளிட்டவைகளுக்கு மிகவும் நல்லது.

1 /7

நட்ஸ் வகைகளில் தனித்துவமான மருத்துவ குணங்களை கொண்ட வால்நட்டில், ஃபைபர், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. 

2 /7

வால்நட்ஸில் ஆண்டி - ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதை உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தியை அதிகப்படுவதோடு ஒரு வேலையில் நிலையான கவனம் செலுத்த உதவுகிறது. 

3 /7

வால்நட்ஸை உட்கொள்வதால் கேட்ட கொழுப்புகள் குறைகிறது.அதேபோல் இரத்த நாள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4 /7

வால்நட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் பசியை கட்டுப்படுத்துகிறது. இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. 

5 /7

வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இதனை உட்கொள்வதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

6 /7

மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் வால்நட்சில் வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம் போன்ற சிறந்த உயர்தர ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. 

7 /7

வால்நட்ஸை தினமும் உட்கொள்வதால் தலைமுடி உதிர்வை குறைக்க முடியும். அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7 முடியின் வலிமை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.