சியோல், தென் கொரியா: வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அனுப்பிய செய்தியில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இரு நாடுகளுக்கு இடையேயான "நட்பு மற்றும் கூட்டுறவு உறவுகளை தடை இல்லாமல் வளர்த்துக் கொள்வது" தனது அரசாங்கத்தின் "உறுதியான நிலைப்பாடு" என்று தெரிவித்ததாக கொரிய அரசின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, சீனாவும் வட கொரியாவும் (North Korea) உறுதியாகவும் திடமாகவும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துள்ளன என்று ஜி ஜின்பிங்க் தனது செய்தியில் கூறினார்.
"கடந்த நூற்றாண்டில் காணப்படாத வகையில் பல மாற்றங்களை உலகம் சமீபத்தில் கண்டது" என்று ஜி கூறினார். "இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக சீனா மற்றும் வட கொரியாவின் இருதரப்பு உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு புதிய நிலைகளுக்கு உயர வேண்டும் என விரும்புகிறேன்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: North Korea:கடுமையான உணவு பற்றாக்குறை, வாழைப்பழம் விலை ரூ.3000/கிலோ
கொரோனா வைரஸ் தொற்றுநோயாலும் (Corona Pandemic), அணு ஆயுதக் கொள்கை காரணமாக அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பல வித பொருளாதாரத் தடைகளாலும், வட கொரியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், வட கொரியா, தனது கூட்டாளியும், ஆபத்து காலங்களில் உதவும் நாடுமான சீனாவிடமிருந்து அதிகபட்ச உதவிகளை எதிர்பார்க்கின்றது.
சீனா (China), தனது பங்கிற்கு, வட கொரியா பேரழியை சந்திக்காமல் தடுக்க தன்னாலான உதவிகளை செய்து வருகின்றது. வட கொரியாவின் பாதுகாப்பு சீனாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமாகும். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தனக்கு அதரவாக ஒத்த சிந்தனையுடைய நாடுகளை தன் பக்கம் சேர்ப்பதில் சீனா கவனம் செலுத்தி வருகிறது.
கிம் தனது செய்தியில், “இரு நாடுகளின் சோசலிச காரணத்தை பாதுகாப்பதிலும், முன்னெடுப்பதிலும் இதரப்பு உடன்படிக்கை அதன் வலுவான உறுதியைக் காட்டுகிறது. இப்போது விரோத சக்திகள் சீனா மற்றும் வட கொரியா எதிர்ப்பு நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மிக அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.
1961 ஆம் ஆண்டின் நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தத்தின் கீழ், வட கொரியா அல்லது சீனா மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால், ஒருவருக்கொருவர் உடனடி இராணுவ உதவிகளையும் பிற உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளன.
ALSO READ: ‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’; உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR