US Elections: அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பிடன்!!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 7, 2020, 11:59 PM IST
  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வந்துவிட்டன.
  • அமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன்.
  • கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
US Elections: அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பிடன்!! title=

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வந்துவிட்டன. தெரிந்தும் தெரியாமல் இருந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden).

கொரோனா காலத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தல்கள் (US Elections), வினோதமான பிரச்சாரங்களுக்கு பிரபலமானது. ஆனால் தேர்தல்களின் வாக்கெண்ணிக்கை அதைவிட வினோதமாக இருக்கப்போகிறது என அப்போது யாருக்கும் தெரியாது.

இதுவரை இல்லாத அளவு வாக்கெண்ணிகை அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. இதற்கிடையில் தான் வென்றுவிட்டதாக, டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவிப்பையே வெளியிட்டார். இறுதியாக வாக்கு எண்ணிக்கை முடிந்து ஜோ பிடன் தற்போது அமெரிக்க அதிபராகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

“நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக இருப்பேன்” என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனக்கு வாக்களித்தவர்களுக்கும், அளிக்காதவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க வாக்காளர்களுடன் தன் மனதின் கருத்துகளை பகிர்ந்துகொண்ட பிடன், ட்விட்டரில், “அமெரிக்கா, இந்த பெரிய நாட்டை வழிநடத்த நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். நமக்கு முன்னால் உள்ள பணி கடினமாக இருக்கும். ஆனால், நான் எனக்கு வாக்களித்தவர்களுக்கும் அளிக்காதவர்களுக்கும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக இருப்பேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.

ALSO READ: சித்தி கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் தமிழக கிராமம்..!!!

ஜோ பிடனின் கீழ் இனி அமெரிக்கா தனது பயணத்தைத் தொடரும். கொரோனா காலத்தில் பதவி ஏற்கும் ஜோ பிடனுக்கு முன் பல சவால்கள் இருக்கின்றன என்றாலும், அனைத்து சவாலகளையும் சமாளித்து நாட்டை முன்னோக்கி நடத்திச் செல்லும் திறமை அவருக்கு உள்ளது என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

ALSO READ: ‘ஜோ அதிபரானால் ஜாலிதான்’- மகிழிச்சியில் மிதக்கும் பாகிஸ்தான், காரணம் இதுதான்….

 

Trending News