கேம் விளையாட போன் கொடுக்காதிங்க... ஒரே இரவில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்த சிறுவன்!

Bizarre Viral News: சிறுவன் தந்தையிடம் இருந்து கேம் விளையாட மொபைலை வாங்கி, சுமார் ரூ. 80 ஆயிரத்திற்கு உணவு டெலிவரி செயலியில் உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 6, 2023, 07:51 AM IST
  • பல்வேறு கடைகளில் பல வகையான உணவுகளை அவன் ஆர்டர் செய்துள்ளான்.
  • டெலிவரி வரிசையாக ஆட்கள் வந்த பின்னர்தான் இதுகுறித்து தெரியவந்தது.
  • கடைசியில் செம ட்வி,ட்டை அந்த உணவு டெலிவரி செயலி வைத்தது.
கேம் விளையாட போன் கொடுக்காதிங்க... ஒரே இரவில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்த சிறுவன்! title=

Bizarre Viral News: இன்றைய காலத்தில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. சிறு குழந்தைகள் அடம்பிடித்து வீடியோக்களைப் பார்க்கவும், போனில் கேம் விளையாடவும் பெற்றோர்களிடம் போனை கேட்கின்றனர், அதற்கும் பெற்றோர்கள் எளிதாக அவர்களிடம் போனை கொடுப்பதும் இப்போது இயல்பாகிவிட்டது. 

அந்த வகையில், அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது 6 வயது மகன் தூங்கச்செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னாடி, செல்போனை கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் ஒருநாள் இவரின் இந்த பழக்கம் அவரை திடுக்கிட வைத்தது. செல்போனில் கேம்களை விளையாடுவதற்குப் பதிலாக, சிறுவன் உணவு டெலிவரி செயலியைத் திறந்து, பல்வேறு உணவகங்களில் இருந்து அதிக அளவிலான உணவை ஆர்டர் செய்துள்ளான். அதாவது, 1000 அமெரிக்க டாலர்களுக்கு  (சுமார் ரூ. 82 ஆயிரம் ) அந்த சிறுவன் ஆர்டர் செய்துள்ளான்.

மிச்சிகன் மகாணத்தின் மெட்ரோ டெட்ராய்டில் உள்ள செஸ்டர்ஃபீல்ட் டவுன்ஷிப்பைச் சேர்ந்த சிறுவன், ஒரு சனிக்கிழமை இரவில் தனது தாயார் வீட்டில் இல்லாதபோது,  Grubhub (Swiggy, Zomato போன்றது) உணவு விநியோக செயிலி மூலமாக உணவை ஆர்டர் செய்தான். இந்த நேரத்தில், அவரது தந்தை, கீத் ஸ்டோன்ஹவுஸ், அவர் மகன் மொபைலில் கேம் விளையாடுவதாகக் கருதினார். மேலும், அந்த சிறுவன் ஒவ்வொரு ஆர்டருக்கும் 25% Tips கொடுக்கும் ஆப்ஷனையும் தேர்வு செய்துள்ளான்.

மேலும் படிக்க | வங்க தேசத்தில் தாக்கப்பட்ட இந்துக் கோயில்கள்; இந்துக்கள் மத்தியில் பீதி!

வாசலில் மணி அடித்து, ஒன்றன் பின் ஒன்றாக உணவு விநியோகம் வந்தபோதுதான், ஏதோ தவறாக நடப்பதாக அவனது தந்தை உணர்ந்தார். முதலில் Happy என்ற உணவகத்தில் இருந்து சில இறால் வகை உணவு வந்தது. பிறகு Leo என்ற உணவுகத்தில் இருந்து ஷவர்மாவில் இருந்து சிக்கன் பிடா சாண்ட்விச்கள் மற்றும் லியோவின் ஐஸ்கிரீம், ஜம்போ இறால், சாலடுகள், சில்லி சீஸ் Fries, ஐஸ்கிரீம், திராட்சை இலைகள், அரிசி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உணவுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன!. 

"இது ஏதோ, சனிக்கிழமை இரவு கனவு போன்று இருந்தது" என அந்த சிறுவனின் தந்தை ஸ்டோன்ஹவுஸ் கூறினார். "நான் மேசனை (சிறுவன்) படுக்கவைத்துக்கொண்டிருந்தேன், ஒரு கார் எங்கள் வீட்டுக்கு வருவதைப் பார்த்தேன். ஒரு பெரிய பையில் பொருட்களைக் கீழே இறக்கிவிட்டு ஓட்டுநர் காலிங் பெல்லை அழுத்தினார். என் மனைவி ஒரு பேக்கரி உள்ளது, அந்த சமயம், திருமணங்கள் அதிகமிருந்த ஒரு வார இறுதி நாள். அதனால் யாரோ அவளிடமிருந்து அலங்கார பொருட்களை கொடுக்க வந்திருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால் அது லியோஸ் கோனி தீவில் இருந்து வந்தது. நான் ஒன்றும் புரியாமல் தவித்தேன். 

காலிங் பெல் மீண்டும் அடித்தது. தொடர்ந்து, அடித்துக்கொண்டே இருந்தது. காருக்குப் பிறகு காராக வீட்டு வந்துகொண்டே இருந்தது. ஒரு கார் வெளியே செல்ல, மற்றொரு கார் உள்ளே வருவதுமாக இருந்தது. நான் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தேன், அது குறைந்துகொண்டே வந்தது" என அச்சம்பவத்தை விவரித்தார். 

சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, Grubhub ஸ்டோன்ஹவுஸ் குடும்பத்தை அணுகி அவர்களுக்கு 1,000 அமெரிக்கா டாலர்கள் மதிப்பிலான பரிசு அட்டையை வழங்கியது. இதனால், இப்பிரச்னை சுமுகமாக விலகியது. 

மேலும் படிக்க | Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News