ஒருவேளை போரில் உயிரிழந்தால்...உக்ரைனில் குழந்தையின் முதுகில் எழுதப்படும் குடும்ப விவரங்கள்

ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சி உக்ரைன் மக்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதியுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Chithira Rekha | Last Updated : Apr 5, 2022, 07:46 PM IST
  • தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்
  • உயிர் பயத்தில் உக்ரைன் மக்கள்
  • குழந்தைகள் முதுகில் எழுதப்படும் குடும்ப விவரங்கள்
ஒருவேளை போரில் உயிரிழந்தால்...உக்ரைனில் குழந்தையின் முதுகில் எழுதப்படும் குடும்ப விவரங்கள் title=

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. போர் காரணமாக உக்ரைனிலிருந்து 40 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி வரும் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. குறிப்பாக புச்சா நகரின் வீதிகளில் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தது காண்போரை அதிர்வடைய வைத்துள்ளது.  ரஷ்ய வீரர்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என அஞ்சி பெற்றோர் குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்களை எழுதியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

 

தாங்கள் கொல்லப்பட்டு ஒருவேளை தங்கள் குழந்தை உயிர் பிழைத்தால், யாரேனும் அவர்களை அடையாளம் காண்பதற்காக குடும்ப விவரம் முழுவதையும் உக்ரைன் மக்கள் குழந்தையின் முதுகில் எழுதியுள்ளனர். இதனை சமூக  வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் மனதை உலுக்கும் வகையில் உள்ளதாகவும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் தற்போதும் எரிவாயு குறித்து பேசி வருவதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா மோதலின் கொடூரமான யதார்த்தத்தை இந்த புகைப்படங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | குழந்தைகள் பாலியல் வன்கொடுமை..பெண்கள் சித்ரவதை..ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News