புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, துருக்கி, ஈரான் என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
- 2020 அமெரிக்க தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், தொலைக்காட்சி விளம்பரத்திற்காக $582 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளார் என விளம்பர பகுப்பாய்வுகளின் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
- பிரெஞ்சு எதிர்ப்பாளர் மக்ரோனுக்கு 'மனநல பரிசோதனைகள்' தேவை என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகிறார். தீவிர இஸ்லாத்திற்கு எதிராக தனது நாட்டின் மதச்சார்பற்ற விழுமியங்களைக் காக்கும் மக்ரோனின் முன்மொழிவு துருக்கி அரசாங்கத்தை கோபப்படுத்தியுள்ளது, இரு தலைவர்களுக்கும் இடையிலான வளர்ந்து வரும் மோதல்களை காட்டுகிறது.
- அமெரிக்காவின் நட்பு நாடுகள் இஸ்ரேல்-சூடான் சமாதான ஒப்பந்தத்தை வரவேற்கின்றன, பாலஸ்தீனியர்களின் கவலை அதிகரிக்கிறது.
- 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் பாலஸ்தீனியத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஈரான், பயங்கரவாதத்திறு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான அமெரிக்க அரசின் தடுப்புப்பட்டியலில் உள்ளது. இந்த "போலி" தடுப்புப்பட்டியலில் இருந்து தனனி நீக்க சூடான், "வெட்கக்கேடான" விலையை செலுத்தியதாக ஈரான் சாடுகிறது.
- ஆப்கானிஸ்தானின் கல்வி மையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். காபூலின் மேற்கு மாவட்டத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்த மையத்தில் பிற்பகல் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.
- பள்ளியில் இலவச உணவு வழங்குவதற்கு எதிராக வாக்களித்த ரிஷி சுனக் (Rishi Sunak) கிற்கு இங்கிலாந்து பப் தடை விதித்தது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் உள்ளூர்வாசிகளுக்கு உதவ மூன்று உணவு வங்கிகளுக்கு குறைந்தது 100 சமைத்த சூடான உணவை வழங்குவதாகவும் அந்த பப்-இன் உரிமையாளர் அறிவித்தார்.
- பிரிட்டனால் வழங்கப்பட்ட ஹாங்காங் பாஸ்போர்ட்களை அங்கீகரிக்காத சீனா, தற்போது அவற்றை அங்கீகரிக்கலாமா என்பதை பரிசீலிக்கும்: Zhao Lijian
- பிரச்சாரத்தில் மீண்டும் கலந்து கொள்வதற்கு முன்னதாக புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சுக்கு சென்று டிரம்ப் நேரடியாக வாக்களிப்பார்.
- COVID தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கியதால் ஐரோப்பாவில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2,50,000-ஐ கடக்கிறது.
- பேஸ்புக்கின் Zuckerberg, ட்விட்டரின் டோர்சி ஆகிய இருவரும் அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு அமெரிக்க செனட் குழு முன் ஆஜராகி சாட்சியமளிப்பார்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் ஜோ பிடனின் மகன் குறித்த கூற்றுக்களைத் தடுக்கும் செய்திகளைத் தடுக்கும் முடிவை எடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இருவரும் பதிலளிப்பார்கள்.
- தென் சீனக் கடலில் சீனாவின் 'சட்டவிரோத' மீன்பிடித்தலை சமாளிக்க கடலோர காவல்படையை அமெரிக்கா நியமிக்க உள்ளது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR