கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: அமெரிக்காவை எச்சரிக்கும் தாலிபான்

தாலிபான் ஆட்சியிலிருந்து அதிக மக்கள் வெளியேற வழிவகுக்கும் வகையில், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன் பேசவுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2021, 10:12 AM IST
கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: அமெரிக்காவை எச்சரிக்கும் தாலிபான் title=

காபூல்: அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பல உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பைடன் நிர்வாகமும் அதைப் பற்றி சிந்தித்து வருகிறது. எனினும், இது தொடர்பாக தாலிபான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தோஹாவில் ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், தாலிபான் செய்தித் தொடர்பாளர், அமெரிக்கா அல்லது இங்கிலாந்து மக்களை வெளியேற்றுவதற்கு கூடுதல் நேரம் கேட்டால், அதற்கு பதில் ‘நேரம் அளிக்க முடியாது’ என்றுதான் இருக்கும் என்று கூறினார். இந்த நாடுகள் இவ்வாறு செய்தால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

தாலிபான் (Taliban) செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுஹைல் ஷாஹீன், "இது ஒரு சிவப்பு கோடு. ஆகஸ்ட் 31 அன்று, தங்களது அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அதிபர் பைடன் அறிவித்தார். அவர்கள் அந்த காலக்கெடுவை நீட்டித்தால், அவர்கள் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துகிறார்கள் என்று அர்த்தம். அது இங்கு தேவை இல்லை" என்று கூறினார்.

ALSO READ: அஷ்ரப் கானி ஆப்கானை விட்டு ஓடியதன் காரணம் என்ன; அவரது சகோதரரின் முக்கிய பேட்டி..!!

"அமெரிக்கா (America) அல்லது இங்கிலாந்து வெளியேற்றத்தைத் தொடர கூடுதல் நேரம் கேட்டால், அதற்கு பதில், ‘நேரம் அளிக்க முடியாது’ என்பதுதான். இதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அது எங்களுக்குள் அவநம்பிக்கையை உருவாக்கும். அவர்கள் ஆக்கிரமிப்பைத் தொடர விரும்பினால் அது ஒரு எதிர்வினையைத் தூண்டும்" என்று தாலிபான் செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.

தாலிபான் ஆட்சியிலிருந்து அதிக மக்கள் வெளியேற வழிவகுக்கும் வகையில், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன் பேசவுள்ளார் என்ற அறிக்கைகள் வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு தாலிபானின் இந்த அறிக்கை வந்துள்ளது.

இதற்கிடையில், குழப்பமான வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், காபூலின் சர்வதேச விமான நிலையத்தின் வாயில் ஒன்றில் திங்கள்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஒரு ஆப்கானிஸ்தான் சிப்பாய் கொல்லப்பட்டதாக ஜெர்மன் அதிகாரிகள் கூறினர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேற பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் தாலிபான்கள் மின்னல் வேகத்தில் ஆப்கான் (Afghanistan) தலைநகரையும் பிற நகரங்களையும் கைப்பற்றினர். தலைநகருக்கு வடக்கே உள்ள பிராந்தியத்தை கைப்பற்ற தாலிபான் போறாளிகளை அனுப்பியபோது, விமான நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

எதிர்ப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட மூன்று மாகாணங்களை தாங்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கடைசி மாகாணமான பஞ்ஷிரை சுற்றி வளைத்துள்ளதாகவும் தாலிபான் கூறியுள்ளது.

ALSO READ: ஆப்கானிஸ்தானில் முக்கிய இலக்கான பஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி படையெடுக்கும் தாலிபான் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News