Future of surgery: சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்ட்ரோல் மூலம் அறுவை சிகிச்சை பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த விண்வெளி அறுவை சிகிச்சையானது, அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளது.
நீண்டகால பயணங்களின் போது ஏற்படும் மருத்துவ அவசர சிகிச்சைக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station (ISS))பொருத்தப்பட்டிருந்த ஒரு சிறிய ரோபோவை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தி இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையானது எந்தவொரு உயிரினத்தின் மீதும் செய்யப்படவில்லை என்பதும், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ரப்பர் பொருளின் மீது செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அறுவை சிகிச்சை பரிசோதனை முயற்சி தொழில்நுட்ப புரட்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும். விண்வெளிக்கு நீண்ட தொலைவு பயணம் செய்யும் பணியில் (long-term manned missions) ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு அவசர நிலைமைகளில் சிகிச்சையளிக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும்.
மேலும் படிக்க | 25 வயதில் மாரடைப்பு... கனடாவில் இந்திய மாணவர் மரணம்
அதேபோல, பூமியிலும் குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட அல்லது தொலைதூரப் பகுதிகளுக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் அறுவை சிகிச்சை நுட்பங்களை உருவாக்குவதற்கும் இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்யும் என்று நம்பப்படுகிறது.
விண்வெளியில் அறுவை சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்பட்டது?
ஸ்பேஸ் மீரா (spaceMIRA) என்ற ரோபோவைக் கொண்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விர்ச்சுவல் இன்ஜெக்ஷன் (Virtual Incision (VIC))மற்றும் லிப்ராஸ்கா பல்கலைக்கழகத்தால் (University of Nebraska) உருவாக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் ஸ்பேஸெக்ஸ் (SpaceX) ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குக் அனுப்பப்பட்ட இந்த ரோபோ, ஒரு மைக்ரோவேப் அடுப்பின் அளவிலானது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர் (astronaut) லொரர் கடந்த வியாழக்கிழமையன்ரு இந்த ரோபோவை ஐ.எஸ்.எஸ்ஸில் நிறுவினார். நெப்ராஸ்காவில் (Nebraska) உள்ள மெய்நிகர் தலைமையகத்தில் (Virtual Incision's headquarters) இருந்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் படிக்க | தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய கிரேக்கம்! ஆர்தடாக்ஸ் நாட்டின் அதிரடி முடிவு!
ஆறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து இந்த பரிசோதனை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். கேமரா மற்றும் இரண்டு கைகள் பொருத்தப்பட்ட ரோபோ, நிலையான அறுவை சிகிச்சை நுட்பங்களை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேரம் இயக்கப்பட்ட ரோபோ சரியாக இயங்கியது.
இந்த அறுவைசிகிச்சையில் திசுவை பிடிப்பது கையாளுவது மற்றும் வெட்டுவது போன்ற நிலையான அறுவை சிகிச்சை நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
தொழில்நுட்பமும் சவாலும்
பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சந்தித்த சவால்கள் என்னவென்றால், அது, பூமியில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்த மையத்திற்கும், விண்வெளி மையத்திற்கும் இடையில் சுமார் 0.85 வினாடிகள் இடைவெளி இருந்தது ஆகும். வெற்றிகரமாக முடிந்த இந்த விர்ச்சுவல் இன்டிசன் அறுவை சிகிச்சையை அனைத்து அறுவைசிகிச்சை நிபுணர்களாலும் ஆராய்ச்சியாளர்களும் ஒரு மைல்கல் வெற்றி என்றும், இனி ரோபோக்கள் மூலம் தொலைதூர இடங்களில் சிகிச்சைக் கொடுப்பது சாத்தியமே என்பதை இந்த பரிசோதனை உறுதிப்படுத்தியிருக்கிறது.
அறுவை சிகிச்சையின் எதிர்காலத்தையே மாற்றும் நவீன தொழில்நுட்பம் இது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். நீண்ட விண்வெளிப் பயணங்களில் போது அறுவை சிகிச்சை முறைகள், சிதைவுகளை எளிமையாக தைப்பது முதல் சிக்கலான செயல்பாடுகள் என அறுவை சிகிச்சைக்கான அதிகரித்து வரும் தேவைகளை நிறைவேற்றுவதற்கான இந்தத் திட்டத்திற்கு நாசா நிதி உதவி வழங்கியுள்ளது.
மேலும் படிக்க | உலகின் பெரிய பொருளாதாரம்: சரிந்த ஜப்பான், முன்னேறிய ஜெர்மனி.. அப்போ இந்தியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ