Airstrike on Yemen: சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை! ஏமனில் 70 பேர் பலி!

சவுதி அரேபியா தலைமையிலான ராணுவ நடவடிக்கைகளில் கீழ் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏமனில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 22, 2022, 11:26 AM IST
  • சௌதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை!
  • யேமனில் 70 பேர் பலி!
  • இருதரப்பும் தாக்குதல்களை குறைத்து அமைதியை நிலைநாட்டுக - கோரிக்கை
Airstrike on Yemen: சவுதி தலைமையிலான ராணுவ நடவடிக்கை! ஏமனில் 70 பேர் பலி! title=

ஏமன் மீது சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சாதாவில் உள்ள ஹூதி பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலையில் வான்வழித் தாக்குதல்கள் (Saudi Arabia Attatck) நடத்தப்பட்டன, இதில் குறைந்தது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் இணையதள சேவைகளும் (internet service) பாதிக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்தபோதும், "தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்று குடெரெஸ் கூறினார்.

ALSO READ | அபுதாபியில் எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்

சேதமடைந்த தடுப்பு மையத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள சிறை பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் உட்பட சவூதி நகரங்கள் (Attatck on Saudi Arabia)மீது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடைபெற்றன. இதனை அடுத்து ஹவுதி ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களை சவுதி தலைமையிலான கூட்டணி தீவிரப்படுத்தியுள்ளது.

uae

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். 2015 இல் சனாவில் ஹவுதிகள் அரசாங்கத்தை கவிழ்த்ததை அடுத்து, சவூதி ஆதரவு கூட்டணி தலையிட்டதால் ஏமனில் சிக்கல்கள் ஏற்பட்டன.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பேசிய ஐ.நா.வுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் லானா நுசைபே, "ஹெளதி அமைப்பின் அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும்" என்பதில் செளதி தலைமையிலான கூட்டணி தெளிவாக இருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையில், "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் உள்ள கடமைகள்" (obligations under international humanitarian law) அடிப்படையில், இரு தரப்பினரும் தாக்குதல்களை கைவிட்டு, ஐ.நா. அமைதி நடவடிக்கையில் பங்கேற்கவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.

ALSO READ | 'நான் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை' மனம் திறந்த ஜோ பைடன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News