எங்கள் அணு சக்தி ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை அழிக்க வல்லவை; மிரட்டும் புடின்..!!!

ரஷ்யா தனது முதல் அதி நவீன சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Zircon hypersonic missile )  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதித்ததாகக் கடந்த வாரம், கூறியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 15, 2021, 01:04 PM IST
  • மேக் 3 ( Mach 3) அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும் ஆயுதங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன.
  • புதிய ஏவுகணைகள் வெறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் அல்ல; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்.
எங்கள் அணு சக்தி ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை அழிக்க வல்லவை;  மிரட்டும் புடின்..!!! title=

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டின் புதிய ஹைப்பர்சோனிக் அணு ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை அழிக்கும் திறன் கொண்டவை என்று எச்சரிக்கை செய்துள்ளார், இதனால்,  மூன்றாம் உலகப் போர் வெடிக்குமோ என்ற கவலையை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்டதை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும் ஆயுதத்தை, தனது நாடு உருவாக்கியிருப்பதாக கூறிய ரஷ்யத் அதிபர் எரிசக்தி மன்றத்தில் உரையாற்றும் போது கூறினார்.

விளாடிமிர் புடினின் தனது, ரஷ்யா  தயாரித்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகள், மிகவும் பாதுகாப்பாக எச்சரிக்கை நிலையில் உள்ள அமெரிக்க நகரங்களையும் அழிக்கும் திறன் கொண்டவை என்றார்.

ALSO READ | ‘அணுகுண்டுகள் பூமியை காக்கும்’: விஞ்ஞானிகளின் ஆச்சர்ய தகவல்

ரஷ்ய அதிபர்  புடின் தனது நாட்டின் பெருமையை பேசுவது, அமெரிக்காவுடன் ஒரு இராணுவ மோதல் மற்றும் எதிர்காலத்தில் மூன்றாம் உலகப் போர் ஏற்படுமோ என்ற மேற்கத்திய நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், மாஸ்கோவில் நடந்த எர்சக்தி மாநாட்டில் பேசிய அவர், ரஷ்யா யாருக்கும் தீங்கு செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

"மேக் 3 ( Mach 3) அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும் ஆயுதங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன. எங்கள் அமைப்புகள் மேக் 20 -க்கு மேலான வேகத்தில் பறக்கின்றன. இவை வெறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் அல்ல; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், இவை உங்களிடம் உள்ளதை விட மிக வலிமையான ஆயுதங்கள்" என புடின் குறிப்பிட்டார்.

இத்தகைய நவீன ஆயுத அமைப்புகள் ஏற்கனவே ரஷ்யாவிடம்  உள்ளன என்பதோடு இதே போன்ற அமைப்புகள் மற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன, என விளாடிமிர் புடின் அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம், ரஷ்யா தனது முதல் அதி நவீன சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Zircon hypersonic missile )  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதித்ததாகக் கூறியது.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான செவெரோட்வின்ஸ்கில் (Severodvinsk) இருந்து 6,670mph ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

ALSO READ | பாகிஸ்தான் திருந்தவில்லை என்றால், மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அமித் சா எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News