நீடிக்கும் உக்ரைன் யுத்தம்; ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போர்: ஏழு மாத காலமாக, உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில் ராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் கையெழுத்திட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2022, 01:52 PM IST
  • இராணுவமயமாக்கலின் ஒரு பகுதியாக, நாட்டில் ஆயுத உற்பத்தி அதிகரிக்கப்படும்.
  • குடிமக்கள் மற்றும் வணிகங்கள் நிதி ரீதியாக போருக்கு அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ரஷ்யாவை பலவீனப்படுத்தி அழிக்கும் நோக்கில் மேலை நாடுகள் செயல்படுகின்றன.
நீடிக்கும் உக்ரைன் யுத்தம்; ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு! title=

ரஷ்யா-உக்ரைன் போர்: ஏழு மாத காலமாக, உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில் ராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் கையெழுத்திட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். நாட்டு மக்களிடையே ஆற்றிய ஒரு அரிய உரையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் போர் நடவடிக்கை தொடங்கி ஏறக்குறைய ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் 2 மில்லியன் வலிமையான இராணுவ துருப்புக்களை அணிதிரட்டுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டதாக அறிவித்தார். "தாய்நாடு, அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக" எடுக்கப்பட்ட முடிவு என்று புடின் கூறியுள்ளார். இராணுவமயமாக்கலின் ஒரு பகுதியாக, நாட்டில் ஆயுத உற்பத்தி அதிகரிக்கப்படும், இதன் விளைவாக, நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் வணிகங்கள் நிதி ரீதியாக போருக்கு அதிக பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ரஷ்யாவை பலவீனப்படுத்தி அழிக்கும் 

"ராணுவ அணிதிரட்டலைப் பற்றி கூறுகையில், தற்போது துணை ராணுவ படைப் பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பான அனுபவம் உள்ளது" என்று புடின் வலியுறுத்தினார். "சுதந்திரம் பெற்ற நிலங்களில்" உள்ள மக்களைப் பாதுகாக்க அவசர முடிவை எடுப்பது ரஷ்யாவின் கடமை என்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது என்று புடின் கூறினார். அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எல்லை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டிய புடின், ரஷ்யாவை பலவீனப்படுத்தி அழிக்கும் நோக்கில் மேலை நாடுகள் செயல்படுகின்றன என குற்றம்சாட்டினார். மேலும், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே ரஷ்யாவின் முக்கிய குறிக்கோள் என்று புடின் கூறினார்.

மேலும் படிக்க | விமான போக்குவரத்தில் அடி வாங்கும் ரஷ்யா! மேற்கத்திய நாடுகளின் தடைகளின் எதிரொலி

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ரஷ்யாவின் பகுதிகளாக மாற விரும்புகிறதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு புடின் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

கடந்த ஏழு மாத காலங்களாக போர் நடந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களில், ரஷ்யா சில பின்னடைவுகளை சந்தித்துள்ளது. உக்ரைன் கணிசமான இடத்தை மீட்டதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது இழந்த பிரதேசங்களை மீட்பதற்கும் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக உறுதியாக முன் நோக்கி நகர்வதற்கும் ரஷ்யாவின் உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமையன்று புடினின் உரையில், கெய்வ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளால் கட்டளையிடப்பட்டதாகவும், உக்ரைன் தற்போது நேட்டோவால் பயிற்சி பெறும் "நியோ-நாஜி தீவிரவாதிகளை" சேர்த்து தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzia ஆகிய பகுதிகள், ரஷ்யா உடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வாக்களிக்க ஏற்பாடு செய்து, ரஷ்யாவின் உத்தியோகபூர்வ பிரதேசங்களாக மாறுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News