Rheanna Cartier: எல்லா நேரத்திலும் தங்கள் தோற்றத்தைப் பற்றி அக்கறை கொண்ட பெண்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அதே நேரத்தில், சில பெண்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இயல்பாக இருப்பதையும் விரும்புவார்கள். ஒரு கட்டத்தில் விலங்குகளுக்கு மத்தியில் வாழ்வது, குடிப்பது, சாப்பிடுவது விலங்குகளுடன் படுத்து தூங்குவது என இருந்த டாம் பாய் பெண், திடீரென்று அப்படியே வேறொரு பெண்ணாக உருமாறி வந்தது பார்ப்பவர்களை திகைக்க வைத்தது.
20 வயதான ரிஹானா கார்டியரைப் பார்த்தாலே அவளது அழகைப் புகழ்ந்து கொண்டே இருப்பீர்கள் என்கிறார்கள் அவரை பார்த்தவர்கள். அழகு ராணியாக மாறியிருக்கும் இந்த நடிகை, தோற்றம் முதல் நடத்தை வரை மிகவும் கச்சிதமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் இப்படி இல்லை என்பதை தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
குழந்தை பருவம்
டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி, அவர் முன்பு மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்தார். ரிஹானா கார்டியரின் குழந்தைப் பருவம் பல்வேறு காட்டு மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் இருந்துள்ளது. அவரும் அவற்றை கவனித்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். பொதுவாக குழந்தைகளின் குழந்தைப் பருவம் இப்படிக் கழிவதில்லை, ஆனால் ரிஹானாவின் குழந்தைப் பருவம் இப்படித்தான் கடந்திருக்கிறது.
விலங்குகள் மீதான அன்பு
இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸ் பகுதியில் வசிக்கும் ரிஹானா, சில விலங்குகளுக்கு உணவளிக்க காலை 6 மணிக்கு எழுந்திருப்பார். அப்போது அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், விலங்குகளின் பராமரிப்பு மற்றும் உணவின் காரணமாக, விலங்குகள் மீதான அவரது உணர்திறன் மற்றும் அன்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
16 வயதில் மாடலிங்
ரிஹானா தனது தாயிடமிருந்து விலங்குகளை நேசிக்க கற்றுக்கொண்டதாக கூறுகிறார். அவர் 15 வயதாக இருந்தபோது, மிருகக்காட்சிசாலையில் வசிக்க ஆரம்பித்தார். ரிஹானா தனது குழந்தைப் பருவத்தை இங்கே கழித்தார். 12 வயதில் இங்கிருந்து வெளியேறிய அவர் 16 வயதில் மாடலிங் உலகில் நுழைந்தார்.
அவள் ஆரம்பத்தில் ஒரு டாம்பாயாக இருந்துள்ளார் என அவரே கூறுகிறார். அவர்கள் மிருகக்காட்சிசாலையில் வசிப்பதால் பெண்களின் பழக்கவழக்கங்களும், மற்ற சமாச்சாரங்களும் பெரிதாக இவருக்கு தெரியாது. மாடலிங் நாட்களில், அவர் மக்களைச் சந்திக்கவும் பழகவும் விரும்பினார் என கூறப்படுகிறது.
மிஸ் ஈகோவில் இறுதிப் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது. இப்போது யுனைடெட் கிங்டமில் நடக்கும் மிஸ் எர்த் போட்டியில் பங்கேற்கிறார். பிரித்தானிய உயிரியல் பூங்காக்களின் நல்ல பணியை ஊக்குவிக்க விரும்புவதாக ரிஹானா கூறுகிறார். இதனால் அரிதான மற்றும் ஆபத்தான விலங்குகளை காப்பாற்ற முடியும். விலங்குகளின் நலனில் தன் பட்டத்தை பயன்படுத்த விரும்புகிறாள்.
மேலும் படிக்க | இந்தியர்களுக்கு ஜாக்பாட்! கிரீன் கார்டு விதிகளைத் தளர்த்திய அமெரிக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ