புதுடெல்லி: இயற்கையை நாம் நடத்தும் முறையை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்கள் இன்னும் ஆபத்தானவையாக இருக்கும் என்றும், இந்த தொற்றுநோய்கள் (Pandemic) அடிக்கடி வரும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) பயோ டைவர்சிடி குழு வியாழக்கிழமை எச்சரித்தது.
COVID-19 போன்ற தொற்றுநோய்கள் அடிக்கடி நிகழும், அதிகமான மக்களைக் கொன்று, உலகப் பொருளாதாரத்திற்கு இன்னும் அதிகமான சேதத்தை உருவாக்கும் என்று இந்த குழு கூறியுள்ளது. இயற்கையை மரியாதையுடன் நடத்துவதில் அடிப்படை மாற்றம் இல்லாவிட்டால் இப்படி கண்டிப்பாக நடக்கும் என்று குழு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரசைப் போலவே விலங்குகளில் இன்னும் 850,000 வைரஸ்கள் உள்ளன என்றும் அவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று IPBES என்ற அந்த குழு எச்சரித்தது. தொற்றுநோய்கள் மனிதகுலத்தின் இருப்பிற்கே ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
"COVID-19 தொற்றுநோய்க்கான காரணத்திலோ அல்லது எந்த ஒரு நவீன தொற்றுநோய்க்கான காரணத்திலோ எந்த வித பெரிய மர்மமும் இல்லை" என்று சுற்றுச்சூழல் சுகாதார கூட்டணியின் தலைவரும், அறிக்கையை தயாரித்த IPBES குழுவின் தலைவருமான பீட்டர் தாஸ்ஸாக் கூறினார்.
1918 இன் இன்ஃப்ளூயன்ஸா பரவியதிலிருந்து, COVID-19, உலகை தாக்கியிருக்கும் ஆறாவது தொற்றுநோயாகும் என்றும் இவை அனைத்துக்கும் மனித நடவடிக்கைகளே முழுமையான காரணம் என்றும் குழு கூறியது.
ALSO READ: COVID உச்சியை நாம் தாண்டி விட்டோமா அல்லது டிசம்பரில்தான் உண்மையான தாண்டவமா!!
"காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும் அதே மனித நடவடிக்கைகள்தான், அவை விவசாயத்தில் எற்படுத்தும் பாதிப்பின் மூலம் தொற்று அபாயத்தையும் உண்டாக்குகின்றன” என்று குழு கூறுகிறது.
பல்லுயிர் (Biodiversity) மற்றும் தொற்றுநோய்கள் குறித்த சிறப்பு அறிக்கையின் ஆசிரியர்கள், இயற்கை வாழ்விடங்களை அழித்தல் மற்றும் தீராத நுகர்வு ஆகியவற்றின் காரணமாக விலங்குகளால் பரவும் நோய்கள் எதிர்காலத்தில் அதிக அளவில் மக்களைத் தாக்கும் அதிக வாய்ப்புள்ளது என்று கூறினர்.
காடுகளின் அழிப்பு, விவசாய விரிவாக்கம், வனவிலங்கு வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழலின் நீடித்த சுரண்டல் ஆகியவை இதில் அடங்கும். இவற்றின் மூலம் மனிதர்கள் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகளுடன் அதிக அளவில் நெருங்கிய தொடர்பைக் கொள்கிறார்கள். இதனால் விலங்குகளில் இருக்கும் நோய்களுடனும் மனிதர்களுடைய தொடர்பு அதிகரிக்கிறது.
எபோலா, ஜிகா மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற நோய்களில் குறைந்தது 70% ஜூனோடிக் ஆகும் - அதாவது அவை மனிதர்களிடம் பரவுவதற்கு முன்னர் விலங்குகளில் பரவுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களிடையே சுமார் ஐந்து புதிய நோய்கள் பரவுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு நோய் தொற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது என்று குழு எச்சரித்தது.
ALSO READ: ‘COVID-19 தடுப்பு மருந்து வழங்கலுக்கு தயார் நிலையில் இருக்கவும்’: Centre to States
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR