கேன்சர் நோயால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் சிகிச்சை பெற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா வருவதற்கான தனது விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, தனக்கு அனுமதி அளித்து தன்னை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபைஷா தன்வீர் என்ற 25 வயது இளம்பெண், அமலோபாஸ்டோமா என்னும் வாய்வழி கட்டியால் அவதிப்பட்டு வருகிறார்.
தனது உயிரை காப்பாற்றக் கோரி சமூக வலைதளத்தின் மூலம் இந்திய அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு, தனக்கு சிகிச்சை அளிக்க வகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும் கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது புகைப்படம் மற்றும் வீடியோவையும் அதில் பகிர்ந்துள்ளார்.