தென்னாப்பிரிக்காவை புரட்டிப்போட்ட புயல்!..400 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 17, 2022, 11:05 AM IST
  • தென்னாப்பிரிக்காவில் வரலாறு காணாத மழை
  • 400-க்கும் மேற்பட்டோர் பலி
  • வீடுகளை இழந்த 40 ஆயிரம் பேர்
தென்னாப்பிரிக்காவை புரட்டிப்போட்ட புயல்!..400 பேர் பலி title=

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு - நடாலில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. சுமார் 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 

மேலும் படிக்க | Tropical Storm: பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 138 பேர் பலி

ஈஸ்டர் விடுமுறையில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குவாசுலு - நடால் நகரம் இந்த ஆண்டு வெள்ளத்தினால் களையிழந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 398 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேரை காணவில்லை எனவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ராணுவத்தினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

South Africa Flood

மேலும் வெள்ளத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளும், 50-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். உயிர் பிழைத்த மக்கள் காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடி வருகின்றனர். அவசர கால நிவாரண நிதியாக தென்னாப்பிரிக்க அரசு 68 மில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | அமெரிக்காவின் பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட சூறாவளி: ஏராளமானோர் பலி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News