வடகொரிய சர்வாதிகாரி தனது சுக போக வாழ்க்கைக்காக இயக்கும் Office 39 Network....!!!

வட கொரியாவின் சட்டவிரோத கடத்தல் நெட்வொர்கான ‘Office 39’  என்ற அமைப்பு சர்வாதிகாரியான கிம் ஜாங்-உன்  சுக போகமான ஆடம்பர வாழ்க்கையை வாழ உதவுகிறது என திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2020, 06:28 PM IST
  • வட கொரியாவின் சட்டவிரோத கடத்தல் நெட்வொர்கான ‘Office 39’ என்ற அமைப்பு சர்வாதிகாரியான கிம் ஜாங்-உன் ஆடம்பர வாழ்க்கை வாழ உதவுகிறது.
  • வட கொரியாவில் இருந்து வெளியேறிய ஜேசன் லீ என்பவர் கிம் ஜாங்-உன் இந்த நெட்வொர்க்கை தனது வங்கியைப் போல பயன்படுத்துகிறார் என்கிறார்.
  • கிம்மின் மறைந்த தந்தை கிம் ஜொங்-இல் (Kim Jong-Il) 1974 இல் Office 39 ஐ தொடங்கினார்.
வடகொரிய சர்வாதிகாரி தனது சுக போக வாழ்க்கைக்காக இயக்கும் Office 39 Network....!!! title=

வட கொரியாவின் (North Korea) சட்டவிரோத கடத்தல் நெட்வொர்கான ‘Office 39’ கிம் ஜாங்-உன் (Kim Jong-un) தனது ஆடம்பர வாழ்க்கையை பராமரிக்க உதவுகிறது.

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல், கள்ளநோட்டு அச்சடித்தல், தங்கக் கடத்தல், ஆயுதங்கள் மற்றும் அடிமைகளை வேலைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை 'ஆபிஸ் 39' என்ற நெட்வொர்க்  நிர்வகிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த திடுக்கிடும் தகவல் மூலம், வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங்-உன், நாட்டின் தலைநகரில், அரசு கட்டிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோத செயல்களை இயக்கி வருவது தெரிய வந்துள்ளது. தனது சுக போக வாழ்க்கைக்காக, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல், கள்ளநோட்டு அச்சடித்தல், தங்கக் கடத்தல், ஆயுதங்களை சப்ளை செய்தல் மற்றும் அடிமைகளை வேலைக்காக பயன்படுத்திக் கொள்ளுதல்  போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள 'ஆபிஸ் 39'  என்னும் நெட்வொர்க்கை அமைத்து, அதற்கு நிதியுதவி வழங்கி வருகிறார் என்பது  அம்பலமாகியுள்ளது.

ALSO READ | தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்த காங்கிரஸ்... லடாக் கவுன்சிலர் அதிர்ச்சி தகவல்...!!!

சுக போக வாழ்க்கையை நடத்தவும் ஆடம்பரமான பொருட்களை வாங்கவும்  கிம் ஜாங் உன் செலவழிக்கும் பணம் அனைத்தும் ஆபிஸ் 39  என்ற நெட்வொர்க்கில் இருந்து வருவதாக ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரியும்,  வட கொரியா நிபுணரும் ஆன டேவிட் மேக்ஸ்வெல் (David Maxwell) கூறுகிறார். கிம் தனது காக்னாக்ஸ் (cognacs) என்ற விலை உயர்ந்த மது பானம், மெர்சிடிஸ் (Mercedes ) கார் மற்றும் ரோலக்ஸ் (Rolex ) என்ற மிக விலை உயர்ந்த கடிகாரங்களை வாங்க, இந்த சட்ட விரோத நெட்வொர்க்கை பயனபடுத்தி சட்ட விரோத தொழில்களில் ஈடுபட்டு பணம் ஈட்டுகிறார்.

வட கொரியாவில் இருந்து வெளியேறிய ஜேசன் லீ  என்பவர் தனது போஸ்டில், கிம் ஜாங்-உன் இந்த நெட்வொர்க்கை தனது  வங்கியைப் போல பயன்படுத்துகிறார் என்று கூறியுள்ளார்.

35 வயதான லீ மற்றும் அவரது தந்தை இருவரும் ஆபிஸ் 39 என்ற நெட்வொர்க்கில் உறுப்பினர்களாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் நிறுவனங்களை நடத்தி வந்தனர்.  அவர்கள் பியோங்யாங்கிலிருந்து (Pyongyang) சியோலுக்கும் (Seoul) பின்னர் அமெரிக்காவிற்கும் (US) தப்பிச் சென்றனர்.

நியூயார்க்கில் உள்ள பார்க் ஸ்ட்ராடிஜீஸ் என்ற நிறுவனத்தில் ஆசிய நிபுணராக உள்ள சீன் கிங் (Sean King),  கிம் குடும்பத்தினர், ஒரு நாட்டின் தலைவர்களாக தோற்றமளிக்கும், மிக பயங்கரமான குற்றவாளிகள் என கூறியுள்ளார்.

கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங்கின் (Kim Yo-jong) கணவர் சோ சாங் (Choe Song) , ஆபீஸ் 39 அதிகாரியாக இருக்கிறார் அல்லது தனது மைத்துனரைக் காக்கும் ஒரு இராணுவப் பிரிவில் பணிபுரிகிறார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம்மின் மறைந்த தந்தை கிம் ஜொங்-இல் (Kim Jong-Il) 1974 இல் Office 39 ஐ தொடங்கினார்.

கிம் ஜொங்-உன் (Kim Jong-un), மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார். 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தகுதியான வாரிசாக அவர் தயார்படுத்தபட்டு வந்தார். தனது தந்தையின் மறைவிற்குப் பின்னர் வட கொரியத் தொலைக்காட்சிகளில்  கிம் ஜொங்-உன் அதிபராக அறிவிக்கப்பட்டார். 

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் இறந்து விட்டார் எனவும் பல  சந்தேகங்கள்  எழுப்பப்பட்டன. ஆனால், அவர்  பிறகு, ஒரு தொழில்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை அடுத்து அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. ஆனால்,  நேற்று கிம் ஜாங் உன்னின் உடல் நிலை பற்றிய சந்தேகங்களை ஜப்பான் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்

 

Trending News