அணு ஆயுதப் போருக்குத் தயாராக இருப்பதாக கூறி, அண்மையில் அமெரிக்காவின் டென்ஷனை ஏகத்திற்கும் ஏற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது ரஷ்ய அதிகாரிகளை விண்வெளியில் அணுமின் நிலையத்தை அமைக்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
காஸ்மிக் ஆயுத மேம்பாடு
ரஷ்யாவின் காஸ்மிக் ஆயுத மேம்பாடு பற்றிய சந்தேகங்களுக்கு மத்தியில் விண்வெளியில் அணுசக்தி அலகு ஒன்றை உருவாக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா உருவாக்கிக் கொண்டிருப்பதாக நம்பப்படும் அணு ஆயுதத்தை இராணுவ வல்லுநர்கள் ’Nuclear EMP’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆயுதம் மின்காந்த ஆற்றலின் துடிப்பையும், அதிக சார்ஜ் செய்யப்பட்ட துகள்களையும் உருவாக்க பயன்படுகிறது, இது விண்வெளியில் நுழைந்து, பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களை சீர்குலைக்கும்.
நேற்று (மார்ச் 14 வியாழன்) தனது அதிகாரிகளிடம் பேசிய ரஷ்ய அதிபர் புடின், விண்வெளியில் அணுசக்தி அலகு கட்டுவது உள்ளிட்ட விண்வெளித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்குத் தேவையான சரியான நிதியைப் பெற வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS வெளியிட்டுள்ளது.
ஏராளமான வணிக மற்றும் அரசாங்க செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட அணு ஆயுதத்தை உருவாக்க மாஸ்கோ முயற்சித்து வருவதாக கடந்த மாதம் ஆதாரங்களை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டிருந்தது.
எதற்கு முன்னுரிமை?
ரஷ்ய அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, அரசாங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, புடின் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். ரஷ்யாவிடம் அபாரமான திறமைகள் உள்ளன என்றும், நாம் பெருமைப்படக்கூடிய அளவிற்கு பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ளோம் என்றும் அதிபர் புடின் பேசியதாக தெரிகிறது.
உதாரணமாக விண்வெளியில் இயங்கும் அணுசக்தி அலகு பற்றிப் பேசிய புதின், இந்தத் திட்டத்திற்கு சரியான நேரத்தில் நிதியளிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலும், நாம் நமது முன்னுரிமைகள் எது என்பதை முடிவு செய்யவேண்டும் என்றும், கூடுதல் கவனம் தேவைப்படும் சில துறைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மற்ற நாடுகளில் இல்லாத திறன்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் நாம் அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்" என புடின் கூறினார்.
ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் கருத்து
கடந்த வாரம், ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைவரான யூரி போரிசோவ், நிலவில் அணு ப்ரொஜெக்டரை நிறுவும் திட்டத்தில் ரஷ்யாவும் சீனாவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 5 அன்று நடந்த இளைஞர் திருவிழாவின் போது பேசிய யூரி போரிசோவ், "2033 மற்றும் 2035 க்கு இடையில், சீனாவுடன் இணைந்து சந்திரனுக்கு ஒரு மின் உலையை நிறுவும் திட்டத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்" என்று கூறினார்.
ரஷ்யாவின் விண்வெளி அணு ஆயுதம்
அணு EMP எனப்படும்அத்தகைய ஆயுதம் மின்காந்த ஆற்றலின் துடிப்பையும், அதிக சார்ஜ் செய்யப்பட்ட துகள்களையும் உருவாக்க பயன்படுகிறது. ரஷ்யா ஒரு விண்வெளி ஆயுதத்தை உருவாக்கி வருவதாக கூறும் அமெரிக்கா, ஆனால் அது இன்னும் சுற்றுப்பாதையில் ஏவப்படவில்லை என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த விண்வெளி ஆயுதம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டால், அணு ஆயுதங்களின் வரலாற்றில் ஒரு அபாயகரமான நிலை உருவாகும் என்றும், உலகில் எதிர்பாராத இடையூறுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது.... மேலை நாடுகளை எச்சரிக்கும் புடின்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ