பாகிஸ்தானிய அமெரிக்க டேவிட் கோல்மன் ஹெட்லி சிகாகோவிலோ அல்லது மருத்துவமனையிலோ இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்!
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி 26/11 மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக இருந்த பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லியை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இவருக்கு 35 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி தீர்பளித்தது.
இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி சிகாகோ சிறையில் உள்ள சக சிறை கைதிகள் டேவிட் கோல்மன் ஹெட்லி மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஹெட்லி கடுமையாக காயமடைந்தார். இதையடுத்து, இவரை வடக்கு ஈவன்ஸ்டன் மருத்துவமனையில் பாதுகாப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கபட்டது.
இதை தொடர்ந்து, ஹெட்லியின் வழக்கறிஞர் ஜான் தீஸ் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், டேவிட் கோல்மன் ஹெட்லியின் இருப்பிடம் குறித்து என்னால் தெரிவிக்க முடியாது என்றும் அவர் சிகாகோவிலோ அல்லது மருத்துவமனையிலோ இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஹெட்லியுடன் நான் வழக்கம்போல் தொடர்பு கொண்டு வருகிறேன். இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களில் அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இந்த அறிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். "இந்த நபரைப் பற்றிய தகவலை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சிகாகோவில் உள்ள மெட்ரோபொலிட்டன் திருத்தம் மையம் தெரிவித்திருந்தது!