England PM: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? பரபரப்பு ஊகங்கள் உண்மையாகுமா?

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை ரிஷி சுனக், இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்?!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 17, 2022, 07:11 AM IST
  • இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா?
  • ஊகங்கள் உண்மையாகுமா?
  • இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை ரிஷி சுனக்
England PM: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? பரபரப்பு ஊகங்கள் உண்மையாகுமா? title=

பிரிட்டன் பிரதமர் ஜான்சனுக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக வருவார் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (England Prime Minister) எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, சொந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும் ‘பார்ட்டிகேட்’ விவகாரம் தொடர்பாக அழுத்தம் அதிகரித்து வருவதால், அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளி அதிபர் ரிஷி சுனக் நியமிக்கப்படலாம் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில் கோவிட் வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்டபோது, ​​10 டவுனிங் தெருவில் 'பிரிங் யுவர் பூஸ்' (‘bring your booze’) பார்ட்டியை நடத்தியதை போர்ரிஸ் ஜான்சன் ஒப்புக்கொண்டதிலிருந்து, நாட்டில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.

உடனடியாக பிரதமர்பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஜான்சனின் நெருக்கடியை கையாள இயலாத தன்மையை பகிரங்கமாக கண்டிக்கும் எம்.பிக்கள் அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ALSO READ | மரணபீதியை ஏற்படுத்தும் BA.2 வேரியண்ட்.. இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

ஜான்சன் பிரதமராக தொடர்வாரா என்பதை முடிவு செய்வதற்கு முன், அவர் மீதான விசாரணை அறிக்கைக்காக நாடே காத்திருக்கிறது. 

கிழக்கு வொர்திங் மற்றும் ஷோர்ஹாமிற்கான கன்சர்வேடிவ் எம்பி டிம் லௌட்டன் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்: "போரிஸ் ஜான்சனின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது, அவரது ராஜினாமாதான் இந்த துரதிர்ஷ்டவசமான அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்ற முடிவுக்கு நான் வருத்தத்துடன் வந்துள்ளேன். அதற்காகக சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன்.

rishi

‘பார்ட்டிகேட்’ கதை வெளியானதில் இருந்து, அவருக்கு மாற்றாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

இங்கிலாந்து நிதியமைச்சர் சுனக் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் நுழைவதற்கு ஆதரவு வலுத்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரிய புத்தக வெளியீட்டாளர் பெட்ஃபேர் (Betfair) இவ்வாறு சொல்கிறார்: 

"பிரதமர் பதவிக்கு, நீண்ட கால விருப்பமான ரிஷி சுனக் இன்னும் முன்னிலையில் இருக்கிறார், பிரதமர் எண் 10 ஐ காலி செய்கிறார்.”

ALSO READ | ஐரோப்பிய நாடுகளில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன?

பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்புக் கேட்டபோது, ​​புதன்கிழமை ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சேம்பரில் அவர் வெளிப்படையாக இல்லாதது, அவரது சொந்த தலைமைத்துவ லட்சியங்களை பிரதிபலிப்பதாக பலருதும் கருதினார்கள்.

பிரதமர் மன்னிப்பு கேட்பது சரிதான் என்று சொல்லும் ரிஷி சுனக், அவர் மீதான விசாரணை முடிவுகளுக்காக  பொறுமை காக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்று ட்வீட் செய்தார்.

ரிஷி சுனக் யார்?

இங்கிலாந்தில் பிறந்த சுனக், (England Finance Minister Rishi Sunak) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட்டில் படித்து பட்டம் பெற்றாவர். தற்போது, இங்கிலாந்தின் நிதியமைச்சராக பதவி வகிக்கிறார் ரிஷி சுனக்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தகக்து. நாராயண மூர்த்தி- சுதா தம்பதிகளின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக்,இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

யார்க்ஷயர் ரிச்மண்ட் தொகுதி எம்.பியான ரிஷி சுனக், 2015 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நுழைந்தார். மற்றும் ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுவதற்கான ஜான்சனின் உத்தியை உறுதியாக ஆதரித்தவர்களில் ஒருவர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.  

ALSO READ | Novak Djokovic கனவு தகர்ந்தது; நாடு திருப்பி அனுப்ப உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News