LPG Rate Increase: எரிவாயு விலை உயர்வால் பற்றி எரியும் கஜகஸ்தான்!

கஜகஸ்தானில் எல்.பி.ஜி விலையை அரசு அதிரடியாக அதிகரித்ததால் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு பல உயிர்களை பலி கொண்டுள்ளது. எதிர்க்கும் மக்களை அடக்க ரஷ்யாவில் இருந்தும் படைகள் விரைந்துள்ளன. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2022, 11:05 AM IST
  • கஜகஸ்தானில் பதற்றம்
  • எல்.பி.ஜி விலை அதிகரிப்பால் போராட்டம்
  • போராட்டம் வன்முறையாக மாறியதில் பலர் பலி
LPG Rate Increase: எரிவாயு விலை உயர்வால் பற்றி எரியும் கஜகஸ்தான்! title=

கஜகஸ்தானில் எல்.பி.ஜி விலையை அரசு அதிரடியாக அதிகரித்ததால் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பு வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு பல உயிர்களை பலி கொண்டுள்ளது. எதிர்க்கும் மக்களை அடக்க ரஷ்யாவில் இருந்தும் படைகள் விரைந்துள்ளன. 

அல்மாட்டி நகரத்தில் கலவரம் உச்சத்தில் உள்ளது. அங்கு, காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததில் பல போராட்டக்காரர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

திரவ பெட்ரோலிய எரிவாயுவின் (liquefied petroleum gas) விலை இரு மடங்காக அதிகரித்ததால் கஜகஸ்தானில் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. 

ALSO READ | வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

மக்களின் போராட்டம் வன்முறையாக (Protest turned as violence) மாறியதில் ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர், 353 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கஜகஸ்தான் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யா தனது படைகளை அனுப்புகிறது. Collective Security Treaty Organization என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ள நாட்டில் அமைதியை திரும்பக் கொண்டுவதற்காக ரஷ்யா படைகளை அனுப்புவதாக கூறப்படுகிறது.

ரஷ்யா, பெலாரூஸ், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆர்மீனியா ஆகியவற்றுடன் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு இதுவாகும்.  CSTOவின் அமைதி காக்கும் படையினராக ரஷ்யா தனது படையினரை அனுப்புகிறது. 

ALSO READ | கடல் விவசாயத்தில் புரட்சி

ஆனால், இந்த பிரச்சனையின் பின்னணியில் "பயங்கரவாத கும்பல்," இருப்பதாக கஜகஸ்தான் அதிபர் கஸ்யம் ஜோமார்ட் டோகாயேவ் (Kassym-Jomart Tokayev) குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் LPG விலையின் அதிகபட்ச விலை வரம்புக்கான கட்டுப்பாட்டை நீக்கியதால் போராட்டங்கள் தொடங்கின. பின்னர் அது அரசியல் பிரச்சனைகளுக்கு எதிரானதாக விரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடுமையான முறையில் எதிர்ப்பாளர்கள் அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்த அதிபர், நாடு தழுவிய அவசரகால நிலையை அமல்படுத்தியுள்ளார். எனவே,  நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் கூட்டங்களுக்குத் தடை போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன.

1991-ம் ஆண்டு கஜகஸ்தானை சுதந்திரம் பெற்ற பிறகு, அதிபர் டோகாயேவ் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை வகித்து வருகிறார். 2019ஆம் ஆண்டில் தேர்தலின்போது,  டோகாயேவ் ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டதாக அவர் மீது பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

ALSO READ | பாதுகாப்பில் பெரிய குறைபாடு! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News