சரியான நேரத்தில் அமெரிக்காவுக்கு பொருத்தமான பதிலடி கொடுப்போம்: ஈரான்

ஈரான் அரசாங்கமும், அந்நாட்டு இராணுவமும் எச்சரிக்கையாக உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க ஏற்பாடுகள் நடந்தி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2020, 09:16 PM IST
சரியான நேரத்தில் அமெரிக்காவுக்கு பொருத்தமான பதிலடி கொடுப்போம்: ஈரான் title=

தெஹ்ரான் / புதுடெல்லி: ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அமெரிக்கா மீண்டும் ஈராக் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானை குறிவைத்து செய்யப்பட்டது. பாக்தாத்தின் வடக்கே உள்ள கேம்ப் தாஜி மீதான இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரத்தின்படி, மதியம் 1.12 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. 

ஈரானின் ஆதரவு போராளிகளைக் கொண்ட இரண்டு கார்களை குறிவைத்ததாக விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக்கின் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஈரானின் ஆதரவைக் கொண்ட ஒரே அமைப்பபான ஹஷாத் அல் ஷாபியை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு நாளில் இரண்டு தாக்குதலை ஈரான் மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்களால் இருதரப்பு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போர் ஏற்படும் என அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. 

ஈரானில், இராணுவமும் அரசாங்கமும் எச்சரிக்கையாக உள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உள்ளூர் செய்தி நிறுவனமான டான்சிம் கருத்துப்படி, ஈரானின் ஆயுதப்படைகளின் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) மூத்த தளபதி ஜெனரல் அபு ஹமாஸ் தலைமையில் பதிலடி தாக்குதலை நடத்த திட்டம் போடப்படுவதாக கூறப்படுகிறது. 

மறுபுறம், வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் காசிம் சுலேமானிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோர் சாலையில் கூடியிருந்தனர். அவர்களின் கையில் சுலைமானியின் படங்கள் இருந்தன. பாக்தாத்தின் தெருக்களில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஈரானின் மிக உயர்ந்த மதத் தலைவரான அயதுல்லா கமேனிக்குப் பிறகு, இரண்டாவது மிக சக்திவாய்ந்தவரா வலம் வந்த ஜெனரல் காசிம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் ஈடுபட்ட மக்கள் கறுப்பு உடைகளை அணிந்து ஈராக் மற்றும் ஈரான் ஆதரவுடைய போராளிகளின் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். பல சக்திவாய்ந்த பெரிய தலைவர்களும் ஈரானின் மக்களும் இந்த ஊர்வலத்தில் ஈடுபட்டனர். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் எடுத்த நடவடிக்கை ஒரு போரைத் தொடங்குவதல்ல, ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சுலைமானி கொல்லப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் சதியில் சுலைமானி ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி கூறினார். அமெரிக்க தூதர்கள் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்க சுலைமணி சதி செய்ததாகவும், இந்தியா மற்றும் லண்டனில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் காசிம் சுலேமானியிடமிருந்தும் உதவி பெறுகிறார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுடனான போரைத் தொடங்க அமெரிக்கா விரும்பவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News