உலகில் முதல் முதலாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்

சீனாவின், ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2021, 03:31 PM IST
  • H10N3 பறவைக் காய்ச்சலால் உலகின் முதல் மனித நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது
  • சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உலகில் முதல் முதலாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்  title=

பெய்ஜிங் (Beijing): சீனா பரப்பிய கொரோனாவில் இருந்து இன்னும் உலகம் விடுபடாத நிலையில், இப்போது, உலகின் முதல்முதலாக சீனாவில் இருவருக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் உலகில் பீதிய கிளப்பியுள்ளது.

சீனாவின், ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அந்நட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.. இருப்பினும் ஜென்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த 41 வயதான இந்த நோயாளியின் உடல் நிலை சீராக உள்ளதாக அரசு நடத்தும் சிஜிடிஎன் (CGTN TV) டிவி தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு ஜியாங்சு (Zhenjiang) மாகாணத்தில் இருந்து  H10N3 பறவைக் காய்ச்சலால் உலகின் முதல் மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன சுகாதார அதிகாரிகள் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து அஞ்ச வேண்டியதில்லை என்றும், இந்த தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், இது பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிகக் குறைவு என்றும் கூறினார்.

பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ள நோயாளிக்கு மே 28 அன்று எச்10என்3 (H10N3) பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் தேசிய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில், அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை விவரிக்கவில்லை.

எச்10என்3 ( H10N3)  மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக, இதற்கு முன்னர் உலகளவில் பதிவாகவில்லை. H10N3 என்பது கோழிப்பண்ணையில் காணப்படும் நோய்க்கிருமி எனவும்,  ஒப்பீட்டளவில் குறைவான வீரியம் கொண்ட விகாரமாகும், மேலும் இது பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு எனவும் கூறப்படுகிறது.

ALSO READ | ஆஸ்திரேலியாவை தாக்கும் ‘எலிப்படை’; இந்தியாவிடம் ‘விஷம்’ கேட்டு கோரிக்கை

 

சீனாவில் பறவை காய்ச்சலில், பலவிதமான விகாரங்கள் உள்ளன, மேலும் பொதுவாக கோழி பண்ணைகளில் வேலை செய்பவருக்கு சில தொற்றுகள் ஏற்படுகின்றன.

H5N8 என்றால் என்ன? பறவைக் காய்ச்சல் திரிபு முதல்முறையாக மனிதர்களைப் பாதித்தது

H5N8 என்பது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் துணை வகை (பறவை காய்ச்சல் வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது). H5N8 மனிதர்களுக்கு குறைந்த ஆபத்தானது என கருதப்பட்டலும், இது காட்டு பறவைகள் மற்றும் கோழிகளுக்கு மிகவும் ஆபத்தானது.

ஏப்ரல் மாதத்தில், வடகிழக்கு சீனாவின் ஷென்யாங் நகரில் காட்டு பறவைகளில் அதிக அளவில் நோய்க்கிருமி H5N6 பறவை காய்ச்சல் காணப்பட்டது.

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

Trending News