மதுபானம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. வசதி மிக்கர் குடித்தால் அது நாகரீகத்தின் அடையாளமாகவும், சாமானியன் குடித்தால் நாகரீக இழுக்கு எனவும் சித்தரிக்கப்பட்டு வரும் சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம்.
இக்கால இளைஞர்களை மட்டும் நாம் இந்த விஷயத்தில் குற்றம் கூறி விட முடியாது. அவர்களின் குடிப்பழக்கத்திற்கு சமுதாயமும் ஒரு காரணி என்பதினை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஏன்?... நண்பர்கள் கூட்டத்தில் நீங்கள் குடிக்காமல் இருந்துவிட்டால் உங்களை விட்டுவிடுவார்களா என்ன.
சரி போகட்டும் நாம் விஷயத்திற்கு வருவோம்.... இக்கால இளைஞர்கள் மதுபானங்களை அசால்டாக குடிக்க பழகிவிட்டனர். எவ்வளவு காட்டமான மதுபானமாக இருந்தாலும் அவர்கள் எளிதில் குடித்துவிடுவார்கள். ஆனால் அதுவே பெண்களாக இருந்தால்? அதுவும் 60. 70 வயதிற்கு மேற்பட்ட பாட்டியாக இருந்தால் அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?
இதை தான் பிரபல யூடியூப் வலைகாட்சி NerdWire சோதித்துள்ளது. பிரபல நிறுவனம் ஒன்றின் விஸ்கியினை பாட்டிகளுக்கு கொடுத்து அவர்களின் உணர்வுகளையும், கருத்துக்களையும் படம் பிடித்துள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவின் இணைப்பு உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது...