வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு எதிரான ஊழல் வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

Last Updated : Feb 8, 2018, 06:47 PM IST
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை title=

2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வங்கதேசப் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார் கலிதா ஜியா. அவர் தனது ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களை, தனது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு நடனமாடிய காதலி: வைரல் வீடியோ

இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் என வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

வைரல்!! நடிகை சமந்தா-வின் பிகினி புகைப்படம்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 72 வயதான கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Trending News