Armenia-Azerbaijan: ரஷ்யாவின் 2வது போர் நிறுத்த முயற்சி பலன் தருமா..!!!

சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் யுத்தம் நடத்திய பின்னர், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் "மனிதாபிமான போர் நிறுத்தம்" அறிவிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2020, 11:45 AM IST
  • சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் யுத்தம் நடத்திய பின்னர், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் "மனிதாபிமான போர் நிறுத்தம்" அறிவிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியது.
  • இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற மலைப்பகுதி தான் பிரச்சனைக்கு காரணம்.
  • இந்த நகோர்னோ-கராபக் என்ற மலைப் பகுதியின் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர்.
  • இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான காஷ்மீர் பிரச்சனை போன்றது.
Armenia-Azerbaijan: ரஷ்யாவின் 2வது போர் நிறுத்த முயற்சி பலன் தருமா..!!! title=

ஆர்மீனியா (Armenia), அஜர்பைஜான் (Azerbaijan)  கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெறும் கடுமையான சண்டைக்குப் பிறகு, ரஷ்யா மேற்கொண்ட இரண்டாவது முயற்சியில் 'மனிதாபிமான போர் நிறுத்த'  உடன்படிக்க ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான, சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் (Nagorno-Karabakh)பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வார கால மோதல்களைத் தணிக்க, போர் நிறுத்தத்தை அறிவிக்க  மேற்கொள்ள ரஷ்யா மேஎற்கொள்ளும் இரண்டாவது முயற்சி இது.

சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் யுத்தம் நடத்திய பின்னர், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் "மனிதாபிமான போர் நிறுத்தம்" அறிவிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியது.

"ஆர்மீனியா குடியரசும் அஜர்பைஜான் குடியரசும் உள்ளூர் நேரப்படி, அக்டோபர் 18, நள்ளிரவில் ஒரு மனிதாபிமான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளன" என்று ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை  தெரிவித்துள்ளது.

அஜர்பைஜானின் வெளியுறவு அமைச்சகம் இதே போன்ற அறிக்கையில் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் (Russian Foreign Minister Lavrov) ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானில் உள்ள வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி பேச்சுவார்த்தை நடத்தியதோடு, கடந்த சனிக்கிழமையன்று மாஸ்கோவில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை "கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை" வலியுறுத்திய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 பிரச்சனையை தீர்க்க  பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர் என மாஸ்கோ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான்  இடையில் உள்ள பிரச்சனையை தீர்க்க கடந்த சனிக்கிழமையன்று மாஸ்கோவில், லாவ்ரோவ் மத்தியஸ்தம் செய்து, 11 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.ஆனால் பின்னர் இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி  தாக்குதல் நடத்தியதோடு, பரஸ்பரம் குற்றம் சாட்டினர்.

ALSO READ | முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியா அஜர்பைஜான் மோதலுக்கான காரணம் என்ன..!!!

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற மலைப்பகுதி தான் பிரச்சனைக்கு காரணம். இந்த  நகோர்னோ-கராபக் என்ற மலைப் பகுதியின் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர். இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான காஷ்மீர் பிரச்சனை போன்றது.  

இரு நாடுகளும் இடையிலான இந்த சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதலே, அதாவது சோவியத் யூனியன் உடையும் முன்னரே, மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

நகோர்னோ-கராபக் மலைப்பகுதி தனக்கு சொந்தமானது என அஜர்பைஜான் கூறி வருகிறது. அதில் அர்மீனியாவை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால், இப்பபகுதி ஆர்மீனிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, 

ALSO READ | தோல்வியடைந்தது ரஷ்யாவின் முயற்சி... மீண்டும் மோதலில் இறங்கிய ஆர்மீனியா-அஜர்பைஜான்..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News