அமெரிக்காவுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான ஹச்-1 பி பணி விசா வழங்க கட்டுப்பாடு விதிக்கும் அதிரடி உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஹச்-1 பி விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அமெரிக்காவில், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பொறியாளர்கள் பலரும் வெளிநாட்டவர்களே. முக்கியமாக, இந்தியர்கள் அந்தப் பணிகளில் அதிகம் பணியாற்றுகின்றனர். எனவே, அதிகமாக உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்துவதற்காக ஹச்-1 பி விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கான அதிரடி உத்தரவில் டொனால்ட் டிரம்ப் நேற்று கையொப்பமிட்டார்.