கொரோனாவை வென்றதா வுஹான்.... உண்மை நிலவரம் என்ன..!!!

வுஹான் மீது படிந்துள்ள கொரோனா கறையை போக்க, சீனா தீவிரமாக முயற்சிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 08:01 PM IST
  • வுஹான் மீது படிந்துள்ள கொரோனா கறையை போக்க, சீனா தீவிரமாக முயற்சிக்கிறது.
  • அனைத்து சீன நிறுவனங்களும் நகரத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை துடைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றன.
  • சீன அரசு இசை விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நகரத்தில் இரவு நேர க்ளப்களும் இயங்க தொடங்கியுள்ளன.
கொரோனாவை வென்றதா வுஹான்.... உண்மை நிலவரம் என்ன..!!! title=

உலகத்திற்கு கொரோனாவை பரிசளித்த வுஹான் (Wuhan) மீது படிந்துள்ள கொரோனா (corona) கறையை அகற்ற சீனா பெரிதும் முயற்சி செய்து வருகிறது.

அனைத்து சீன நிறுவனங்களும் நகரத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை துடைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றன.
                         
வுஹான் நகரத்திலிருந்து பிறந்த வைரஸால் அந்த நகருக்கு ஏற்பட்டுள்ள இழிசொல்லை போக்க சீனா  முயற்சிக்கிறது. சீன வெளியுறவு அமைச்சர் ஆகஸ்ட் 28 அன்று ஐரோப்பாவிற்கு பயணம் செய்தபோது வுஹான் நகரை பாராட்டினார்.

சீன அதிகாரிகளும் அரசாங்க ஆதரவு ஊடகங்களும் நகரின் பிம்பத்தை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. அமெரிக்கா கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் திணறும் அதே நேரத்தில் இந்த கொடிய வைரஸை சீனா விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என பாராட்டப்படுகின்றன. கடந்த வாரம் இங்கு பள்ளிகள் திறக்கப்பட்டபோது, ​​அதுவும் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது.

இப்போது வுஹானில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக மாஸ்க அணியாமல் இருப்பதை பார்க்கலாம். சீன அரசு இசை விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நகரத்தில் இரவு நேர க்ளப்களும் இயங்க தொடங்கியுள்ளன. 

மேலும் படிக்க | பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!!

வுஹானில் சுற்றுலாவும் அனுமதிக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் 7 முதல் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  வுஹானில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2009 உடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் அதிகரித்துள்ளது என சீன ரேடியோ செய்தி வெளியுட்டுள்ளது. இருப்பினும், 2019 உடன் ஒப்பிடும்போது எந்த அளவு சுற்றுலா மேம்பட்டுள்ளது என்ற தரவுகள் வெளியிடப்படவில்லை. கொரோனா காரணமாக வுஹானில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் 2020 ஆரம்பத்தில் மூடப்பட்டன.

மேலும் படிக்க | TN COVID-19 நிலவரம்: இன்று 5,783 பேருக்கு தொற்று; 4 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம்

Trending News