சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது. முழு அடைப்பு, பயணக்கட்டுப்பாடு, அதிக பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சீனா கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தியது. தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதில் 500 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 2 மடங்கு அதிகமாகும். சீனா முழுவதும் 19 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Lockdown : மீண்டும் ஊரடங்கு..! புரட்டிப்போடும் கொரோனா மரணங்கள்!
ஷாங்காய், ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய் நகரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ரஷ்யா மற்றும் வடகொரிய எல்லையில் உள்ள ஹன்சுன் நகரம் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றை முறையாக கையாளவில்லை என ஜிலின் நகர மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒமைக்ரான் தொற்று குறுகிய காலத்தில் வேகமாக பரவுவதாலும், இந்த தொற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய இயலாததாலும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! கொரோனா இன்னும் போகவில்லை, புதிய ஆபத்து வருது
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR