புதுடெல்லி: உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,78,39,641; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,79,516; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,05,94,276.
தமிழகத்தில் நேற்று மேலும் 5, 875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது.
வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...
மெக்ஸிகோ: நேற்று COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது...
ஆஸ்திரேலியா: பேரிடராகக் கருதப்படும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த விக்டோரியா மாகாணத்தின் தலைநகரான மெல்போர்னில் இரவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
வியட்நாம்: நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தீவிரப் பரவலால் தனாங் நகரத்தில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவு...
தென்னாப்பிரிக்கா: COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைத் தாண்டியது...
Read Also | மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!!
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 46,20,444
2. பிரேசில் - 27,07,877
3. இந்தியா - 17,50,723
4. ரஷ்யா - 8,43,890
5. தென்னாப்பிரிக்கா - 5,03,290
6. மெக்சிகோ - 4,34,193
7. பெரு - 4,07,492
8. சிலி - 3,57,658
9. இரான் - 3,01,530
10. கொலம்பியா - 3,06,181உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU என்னும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.