Russia Ukraine Crisis: 'சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு

டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2022, 09:50 AM IST
Russia Ukraine Crisis: 'சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு title=

டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் புடினின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து UNSC அவசரகால அமர்வை நடத்தியது,

இதனிடையே, ரஷ்ய அதிபர் புடின் அரசு தொலைக்காட்சியில் தோன்றி, உக்ரேனியப் படைகளை "ஆயுதங்களைக் கீழே போட" வலியுறுத்தும் அதே வேளையில், "டான்பாஸைப் பாதுகாக்க" "சிறப்பு நடவடிக்கைக்கு" அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவித்தார்.

"நிகழ்வுகளின் முழு போக்கையும், தகவல் பகுப்பாய்வு ரஷ்யாவிற்கும் இடையே மோதல்களைக் காட்டுகிறது, உக்ரைனில் தேசியவாத சக்திகள் தவிர்க்க முடியாதவை மற்றும் காலத்தின் விஷயம்" என்று புடின் தொலைகாட்சி நேரலையில் கூறினார்.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

எங்கள் விவகாரத்தில் தலையிடுவதோ அல்லது ரஷ்யாவிற்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தல்களை உருவாக்க முயற்சிக்கும் எவருக்கும், நம்முடைய பதில் உடனடியாக இருக்கும் என்று புடின் தெரிவித்தார்.

மேலும், வரலாற்றில் இதுவரை அனுபவித்திராத இத்தகைய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது தொலைகாட்சி உரையின்போது தெரிவித்தார். இது உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

முன்னணி நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனில் உள்ள நவ-நாஜிகளை ஆதரிப்பதாக கூறிய ரஷ்ய அதிபர், அதே நேரத்தில் "உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை" என்றும் கூறினார்.

ரஷ்ய இராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலால் அச்சமடைந்திருக்கும் உக்ரைன் மக்களுக்காக உலகமே பிரார்த்திக்கிறது. அதிபர் புடின் ஒரு பேரழிவு உயிர் இழப்பு மற்றும் மனிதகுலத்திற்கே துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார் என அமெரிக்க அதிபர் புடின் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில் தனது கவலைகளைப் பகிர்ந்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  ஆயுத பிரயோகம் ஏதும் இல்லாமல் உக்ரைனை மூன்றாகப் பிரித்துள்ளார். உக்ரைனின் இரு கிழக்கு மாகாண பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உக்ரைனின் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதப் பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாயகம் என்பதும், இந்த கிளர்ச்சியாளர்கள் 2014 முதல் உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளாடிமிர் புடின் தனது எல்லை நாடுகளை  பிரித்தும் இணைத்தும் பல மாற்றங்களை செய்து வருகிறார். 2008 இல், ரஷ்யா ஜார்ஜியாவை ஆக்கிரமித்தது. அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியா ஆகிய இரு மாகாணங்களையும் சுதந்திர நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளையும் கட்டுப்படுத்தும் ரஷ்யா, 2014 இல், இந்த திட்டத்தின் கீழ் கிரிமியாவை இணைத்தது. இப்போது ரஷ்யா கருங்கடல் வரை விரிவடைந்துள்ளது.

2022 இல் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நாடுகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த பிறகு, ரஷ்யா இப்போது இங்கும் தனது வேர்களை ஊன்றுவது கவலைகளை அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News