அதிக கொரோனா தொற்று பதிவு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசிலுக்கு 3-ஆம் இடம்!

பிரேசில் திங்களன்று 674 புதிய கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், மொத்தம் 254,220 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை அறிவித்துள்ளது.

Last Updated : May 19, 2020, 09:43 AM IST
அதிக கொரோனா தொற்று பதிவு செய்துள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசிலுக்கு 3-ஆம் இடம்! title=

பிரேசில் திங்களன்று 674 புதிய கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், மொத்தம் 254,220 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை அறிவித்துள்ளது.

அரசு தகவல்கள் படி பிரேசிலில் இப்போது 16,856 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மற்றும் இந்த தகவலை அடுத்து உலக அளவில் அதிக கொரோனா தொற்றுகளை பதிவு செய்த நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

READ | சாலையில் அலைமோதும் மக்கள்...; இயல்பு நிலைக்கு திரும்பியதா டெல்லி?

கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் எத்தனை நிகழ்தது என பிரத்தியாகமாக நாடு வெளியிடவில்லை, எனினும் கணினியின் உள்ளீடுகளை நிகழ் நேரத்தில் புதுப்பிக்க நாடு மேற்கொண்டுள்ள முன் முயற்சிகளை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பிரேசிலிய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தொற்றுநோயைக் கையாள்வதில் புகழ் இழந்துள்ளார், எனினும் அவர் ஒரு உறுதியான ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 

முன்னாதக கடந்த வாரம், சுகாதார அமைச்சர் நெல்சன் டீச் தனது பதவியில் இருந்து விலகினார். தொற்றுநோய் தொடங்கிய பின்னர் தனது பதவியில் இருந்து விலகிய இரண்டாவது உயர் சுகாதார அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ | மே 31 வரை சில தளர்வுகளுடன் முழு அடைப்பு நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு...

ஜெனரல் எட்வர்டோ பசுவெல்லோ இடைக்கால சுகாதாரத் தலைவராக உள்ளார், போல்சனாரோ-க்கு பதிலாக மற்றொரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆர்வத்தை தற்போது நாடு காட்டவில்லை எனவும் உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, சாவோ பாலோ கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்கு 63,066 வழக்குகள் மற்றும் 4,823 இறப்பு பதிவாகியுள்ளது. ரியோ டி ஜெனிரோ 26,665 நோய்த்தொற்றுகள் மற்றும் 2,852 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News