1959-இல் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்த காரணத்தினால், திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா தலைமையில், திபெத்தியர்களின் மைய நிர்வாகம் அல்லது நாடு கடந்த திபெத்திய அரசு (Central Tibetan Administration) ஏற்படுத்தப்பட்டது. இதன் நாடாளுமன்றம் இந்தியாவில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் (Himachal Pradesh) அமைந்த காங்ரா மாவட்டத்தின், தரம்சாலாவில் 28 ஏப்ரல் 1959-இல் நிறுவப்பட்டது.
நாடு கடந்த திபெத்தியர்களின் மைய நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், தரம்சாலா நகரத்திற்கு அருகே மெக்லியாட் கஞ்ச் எனும் பகுதியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
நாடு கடந்த திபெத்தியர்களின் அரசு தொடர்பாக, அமெரிக்கா (America) 60 ஆண்டுகளில், முதல் முறையாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்து சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. 60 ஆண்டுகளில் முதல் முறையாக, திபெத்தியர்களின் நிர்வாகத்தின் (CTA) பிரதமர் லோப்சாங் சங்கேயை (Lobsang Sangay) வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு அமெரிக்கா அழைத்தது. அதன் பிறகு அவர் அழைப்பை ஏற்று சனிக்கிழமை வெள்ளை மாளிகையை (White House) அடைந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவின் (China) ஜின்பிங் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்று கூறப்படுகிறது.
திபெத்திய மைய நிர்வாகத்திற்கோ அல்லது அதன் தலைவர்களுக்கோ அமெரிக்கா ஒருபோதும் இராஜீய ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த காரணத்திற்காக, அதன் தலைவர் கடந்த 6 தசாப்தங்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் வெள்ளை மாளிகைக்கு செல்லவில்லை. இன்றைய பயணம் சி.டி.ஏ மற்றும் அதன் அரசியல் தலைவர்களை அமெரிக்கா ஏற்றூக் கொண்டுள்ளதை உணர்த்துகிறது
டாக்டர் சங்கே சனிக்கிழமை வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்தார், இது அவரது முதல் சந்திப்பு அல்ல. 2011 இல் சி.டி.ஏ-வின் தலைவரான டாக்டர் சாங்கே கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் பல முறை ரகசிய சந்திப்புகளை நடத்தியுள்ளார். இருப்பினும், இந்த முறை அவருக்கு நேரடியாக வெள்ளை மாளிகைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் அமெரிக்காவுடன் ஒரு நல்ல உறவு ஏற்படும் என்பதன் அறிகுறியாகும்.
அமெரிக்காவின் இந்த முடிவிற்குப் பிறகு, சீனாவுடனான அதன் உறவு மோசமடையக்கூடும், ஏனென்றால் சீனா எப்போதும் திபெத்தை தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது, இப்போது ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு திபெத்தின் நாடுகடத்தப்பட்டவர்களுக்கான அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.
ALSO READ | 12 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் அலர்ஜி.. குளித்தாலே இறந்து விடும் அபாயம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR