கோலாகலமாக நடைபெற்ற புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!!

புதுக்கோட்டையில் நேற்று அமைதியாக முடிவடைந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1028-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

Last Updated : Mar 26, 2018, 01:22 PM IST
கோலாகலமாக நடைபெற்ற புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!! title=

புதுக்கோட்டை மாவட்டம் கீனூர் அருகே தொண்டைமான் நல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 1028-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 248-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கினர்.

முன்னதாக கடந்த ஒரு வாரமாக கிராமத்தினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் வாடிவாசலை பார்வையிட்ட வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கின

இதை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக 248 மாடுபிடி வீரர்களை போலீசார், மருத்துவர்கள் உரிய முறையில் சோதனை செய்த பிறகு அனுமதித்தினர்.

ஜல்லிக்கட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காளைகள் மட்டுமில்லாமல் திருச்சி, சிவகங்கை, மதுரை, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 1,028 காளைகள் வந்திருந்தன. 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளி பாய்ந்து ஓடியது. மாடுகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கு பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 11 தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் நடத்தியதில் ஜல்லிகட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.

அதை தொடர்ந்து, மாட்டுப் பொங்கல் தினமான ஜன.,15-ம் தேதி பால மேட்டில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது முடிந்தது.

இந்த ஜல்லிக்கட்டில் போட்டியில் 1000 காளைகள், 1188 வீரர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 248-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கினர்.

Trending News