Amazon-ல் சாம்சங் போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடிகள்: முந்துங்கள்

 Amazon சேலில் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். இந்த சேலில், சாம்சங் தனது விலையுயர்ந்த தொலைபேசிகளையும் மலிவாக விற்பனை செய்யும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2021, 08:15 PM IST
  • அமேசான் சேலில், Samsung Note 20 இன் 8GB RAM+256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை ரூ .30,399 தள்ளுபடியில் வாங்கலாம்.
  • மேலும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் விற்பனையில் கிடைக்கும்.
  • வாடிக்கையாளர்கள் பரிமாற்ற சலுகைகள் மூலம் Vivo தொலைபேசிகளில் ₹ 3,000 வரை தள்ளுபடி பெறுவார்கள்.
Amazon-ல் சாம்சங் போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடிகள்: முந்துங்கள்  title=

Amazon Great Indian Festival Sale 2021: Amazon Great Indian Festival Sale 2021 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். இந்த சேலில், சாம்சங் தனது விலையுயர்ந்த தொலைபேசிகளையும் மலிவாக விற்பனை செய்யும்.

நீங்களும் விலையுயர்ந்த சாம்சங் (Samsung) தொலைபேசியை வாங்க விரும்பி, ஆனால் உங்கள் பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்றால், இப்போது உங்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த சேலில் மிகக்குறைந்த விலையில் நீங்கள் மொபைல் போனை வாங்கலாம்.

சேலில் கிடைக்கும் போன்களைப் பற்றி சாம்சங் அறிவித்துள்ளது. Live பேஜின் படி, Samsung Note 20 மற்றும் Note 20 Ultra 5G-யில் அசத்தலான தள்ளுபடி கிடைக்கிறது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Samsung Note 20 போன் மிகவும் மலிவாக கிடைக்கும்

அமேசான் (Amazon) சேலில், Samsung Note 20 இன் 8GB RAM+256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை ரூ .30,399 தள்ளுபடியில் வாங்கலாம். தள்ளுபடிக்குப் பிறகு, தொலைபேசியின் விலை ரூ .85,999 இலிருந்து ரூ .55,600 ஆகக் குறைந்துள்ளது. சேலில் உள்ள சிறப்பு சலுகையில், நீங்கள் இந்த போனை ரூ .44,999 க்கு வாங்க முடியும். சாம்சங் இணையதளத்தில் இந்த தொலைபேசியின் விலை தல்ளுபடியுடன்  ரூ. 59,999 ஆகும்.

ALSO READ: Amazon அதிரடி: ரூ. 26,000 Oppo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,000-க்கு வாங்கலாம்

Samsung Note 20 Ultra 5G-ல் 24 ஆயிரம் தள்ளுபடி

அமேசான் சேலில், Samsung Note 20 Ultra 5G  யின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு வகையை ரூ .1,15,000 க்கு பதிலாக ரூ .90,400 க்கு வாங்கலாம். மேலும் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் விற்பனையில் கிடைக்கும். அதை பயன்படுத்தி, இந்த போனை 69,999 க்கும் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன்களிலும் சிறந்த சலுகைகள்

அமேசான் இந்தியா இணையதளத்தின்படி, ரெட்மி (Redmi) 9A 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி மற்றும் ஹீலியோ G25 SoC ஆகிய அம்சங்களுடன் ரூ .6,799 க்கு கிடைக்கும். விவோ வி 21 இ 5 ஜி ரூ .24,990 க்கு கிடைக்கும். Vivo Y73 ரூ .20,990 க்கும், Vivo X60 ரூ .34,990 க்கும் மற்றும் Vivo Y20G 2021 ரூ .13,990 க்கும் விற்கப்படும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் பரிமாற்ற சலுகைகள் மூலம் Vivo தொலைபேசிகளில் ₹ 3,000 வரை தள்ளுபடி பெறுவார்கள்.

ALSO READ: Flipkart Big Billion Day Sale 2021: போனுக்கு ரூ. 15000 வரை தள்ளுபடி, எண்ணற்ற சலுகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News