2023 ஆம் ஆண்டில், சூப்பரான பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது. முந்தைய ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட அதிக சக்தி வாய்ந்த மற்றும் பார்வைக்கு சிறந்த போன்கள் வெளியானது. அந்த வகையில் இந்த வெளியான ஸ்மார்ட்போன்களில் சிறந்தவை குறித்து இங்கே பார்க்கலாம்.
மிகவும் சக்திவாய்ந்த தொலைபேசி: Apple iPhone 15 Pro Max
இந்த ஆண்டு வெளியான பவுர்புல் மொபைல் என்றால் அது Apple iPhone 15 Pro Max தான். இது உலகின் முதல் 3nm வகுப்பு சிலிக்கான் மூலம் இயக்கப்படுகிறது. A17 ப்ரோவின் சிக்ஸ்-கோர் CPU ஆனது மைக்ரோஆர்கிடெக்ச்சுரல் மற்றும் டிசைன் மேம்பாடுகளுடன் 10 சதவீதம் வரை வேகமாக உள்ளது. 16-கோர் நியூரல் என்ஜின் இப்போது 2 மடங்கு வேகமாக உள்ளது. பேட்டரி ஆயுள் கூட சிறப்பாக உள்ளது மற்றும் 29 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்க முடியும். கேமரா குவாலிட்டி பற்றி சொல்லவே தேவையில்லை, அந்தளவுக்கு உயர்தரமாக இருக்கிறது.
மேலும் படிக்க | ஐபோன் 15 மொபைலில் இல்லாதது இந்த மொபைலில் இருக்குது... தெறிக்கும் புது அப்டேட்!
பெஸ்ட் பிரீமியம் ஃபோன்: Samsung Galaxy S23 Ultra
ப்ரீமியம் போன் வகைகளில் தனித்து நிற்கிறது Samsung Galaxy S23 Ultra. S Pen ஸ்டைலஸுடன் வருகிறது. கேமரா வன்பொருள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக உள்ளது. கேமராவில் மிக சிறந்த அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன. புகைப்பட பிரியங்களுக்கு சிறந்த மொபைல் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்து விளங்குகிறது. இது முழு நாள் பேட்டரியையும் வழங்குகிறது.
சிறந்த கேமரா ஃபோன்: கூகுள் பிக்சல் 8 சீரிஸ்
பிரத்யேகமாக கேமராவுக்கு என்று பார்க்கும்போது கூகுள் பிக்சல் 8 சீரிஸ் மற்ற போன்களில் இருந்து தனித்து நிற்கிறது. கேமராவுக்காக சிறந்த ஏஐ தொழில்நுட்பம் இதில் இருக்கிறது. இதனால் புகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைக்கும் மொபைல். அத்துடன் கலர் கரெக்ஷனில் எதிர்பார்க்காத மேஜிக்கை இந்த மொபைலில் நிகழ்த்தலாம். பேட்டரியும் தரமாக இருக்கிறது.
சிறந்த கேமிங் போன்: Asus ROG Phone 7 தொடர்
கேமிங் போன்களை தேடுகிறீர்கள் என்றால் Asus ROG Phone 7 தொடர் சிறந்தது. ROG ஃபோன் 7 மற்றும் 7 அல்டிமேட் ஆகியவை கேமிங்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல்கள். இது பக்க சார்ஜிங் விருப்பம், AirTrigger தொழில்நுட்பம், மல்டி-ஆன்டெனா Wi-Fi மற்றும் ட்ரை-மைக்ரோஃபோன் சத்தம்-ரத்துசெய்யும் அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 செயலியுடன் வருகின்றன. நீண்ட பேட்டரி ஆயுளை வழங்க 6,000mAh செல் திறனையும் கொண்டுள்ளது.
ஆல்ரவுண்டர் மற்றும் பட்ஜெட் மொபைல்கள்
ஆல்ரவுண்டர் மொபைல் என்றால் ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ், அப்பர் மிட் ரேஞ்சில் நத்திங் போன், பெஸ்ட் மிட் ரேஞ்ச் மொபைல்களில் Vivo V29e, iQOO Neo7 மொபைல்கள் வருகின்றன. பட்ஜெட் மொபைல்கள் வரிசையில் ரெட்மி நோட் 12 இடம்பிடித்துள்ளது.
மேலும் படிக்க | இந்தாண்டில் ஆதிக்கம் செலுத்திய மொபைல்கள்... அதுவும் ரூ.15 ஆயிரம் குறைவான விலையில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ