தற்போதைய சமுதாயத்தில் உணவு இல்லாமல்கூட ஒருவர் இருந்துவிடுவார். ஆனால் ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லாமல் ஒருவர் இருப்பது அரிதிலும் அரிது. அப்படி இருப்பவர் அதிசயத்தின் கணக்கில் பார்க்கப்படுவார். 2ஜி, 3ஜி, 4ஜி என பல ஃபோன்கள் வந்துகொண்டிருந்த சூழலில் தற்போது 5ஜி ஃபோன்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது. அதேசமயம் பட்ஜெட் இடிக்கிறதே என அந்த ஃபோன்களை வாங்காமலும் இருக்கலாம். இருந்தாலும் 20,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் சந்தையில் 5ஜி வசதி உடைய ஏகப்பட்ட ஃபோன்கள் கிடைக்கின்றன.
ரியல்மி 9 Pro 5ஜி:
இது ரூ.17,999 முதல் கிடைக்கும். இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.6 இன்ச் எஃப்எச்டி+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 64 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியுடன் 5,000Mah பேட்டரி போன்றவை இருக்கின்றன.
ரியல்மி 9 எஸ்இ :
ரியல்மியின் அடுட்த பட்ஜெட் தயாரிப்பு இது. ரூ.19,999 முதல் கிடைக்கும் இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.6-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 48 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 30W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000Mah பேட்டரி போன்றவை இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி :
இது சாம்சங்கின் பதிப்பு. இந்த ஃபோனானது ரூ.15,999 முதல் கிடைக்கும் இது 6.6 இன்ச் ஃபுல்-ஹெச்டி+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட், 50 மெகா பிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000Mah பேட்டரி போன்றவை இருக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி M33 5ஜி :
சாம்சங்கின் அடுத்த பட்ஜெட்டுக்குரிய ஃபோன் இது. ரூ.17,999 முதல் கிடைக்கும் இந்த மாடல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, எக்ஸிநோஸ் 280 ப்ராசஸர், 50 எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப், 6,000Mah பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
Vivo T1 5ஜி:
விவோ நிறுவனத்தின் தயாரிப்பு இது. ரூ.15,990க்கு கிடைக்கும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.5-இன்ச் ஃபுல்-ஹெச்டி+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,0000Mah பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
IQZ6 5ஜி:
இந்த மொபைலானது ரூ.15,499 முதல் கிடைக்கும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6.58 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695ஜி சிப்செட், 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 5,000Mah பேட்டரி என பல அம்சங்கள் இருகிக்கின்றன.
மோட்டோ ஜி71 5ஜி :
மோட்டோ நிறுவனத்தினுடைய அடுத்த வெர்ஷன் இது. ரூ.19,099க்கு கிடைக்கும். 6.4 இன்ச் ஃபுல்-ஹெச்டி+ அமோ எல்இடி டிஸ்ப்ளே, எஸ்டி 695 சிப்செட், 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய 5,000Mah பேட்டரி அம்சங்களை உடையது.
மேலும் படிக்க | 5G நெட்வொர்க் வேண்டுமா? ஜியோ-ஏர்டெல்-VI வாடிக்கையாளர்கள் இதை செய்யுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata