இனி உங்க வீட்டு நாய் என்ன பேசுதுனு நீங்க சுலபமா தெரிசுக்கலாம்!!

மனிதர்களுடன் நாய்கள் பேசும் அதிநவீன டெக்னாலஜியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

Last Updated : Jan 15, 2018, 11:44 AM IST
இனி உங்க வீட்டு நாய் என்ன பேசுதுனு நீங்க சுலபமா தெரிசுக்கலாம்!! title=

நாம் அனைவர் வீட்டில் வளர்க்கும் நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை, மனிதர்களிடம் பேசுவது போலவே பேசி வளர்கிறோம். நாளடைவில் நாம் பேசுவதை உணர்ந்து அவை செயல்படுவதும் உண்டு. சில நேரங்களில் செல்லப்பிராணிகளின் செயல்களை வைத்து, அவற்றின் தேவைகளை நம்மால் உணர முடிகிறது. 

இந்நிலையில் நாய்கள் செய்யும் சைகைகள், குரைக்கும் விதம், வாலை ஆட்டும் செயல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் அதிநவீன டெக்னாலஜி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

அமெரிக்காவின் கான் ஸ்லோபோட்சிகாஃப் என்ற விஞ்ஞானி கடந்த 30 வருடமாக புல்வெளி நாய்கள், பேசும் விதம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது:- நாய்கள் மனிதர்களுடன் பேசும் டெக்னாலஜியை தயாரித்து வருவதாகவும், அதற்கான ஆராய்ச்சிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களின் குரைக்கும் ஓசைகள் மற்றும் அவற்றின் செயல்கள் தொடர்பான வீடியோக்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் புல்வெளி நாய்களின் செயல்களை ஆங்கிலத்திற்கு மாற்றவுள்ளதாகவும், பின்னர் அந்த டெக்னாலஜியை எளிதில் செல்லப்பிராணிகளுக்கு மாற்ற இயலும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆய்வு பத்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்றும் கூறினார்.
 

Trending News